06/03/2016
Joint venture
ஜாயிண்ட் வென்சர் ஜாக்கிரதை !
திரைப்படம் ஒன்றில் ஒரு புத்திசாலித்தனமான காட்சி. ஒருவரின் கார் பழுதாகி நடுரோட்டில் நின்று கொண்டு இருக்கும். அவர் அவசரமாக டவுனுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவர் அருகே இன்னொரு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் முழுவதும் டிரை ஆகி நின்றுவிடும். அவரும் அவசரமாக டவுனுக்குச் செல்ல வேண்டும். இதற்கிடையில் ஓட்டமும், நடையுமாக மருந்து வாங்குவதற்காக டவுனுக்குச் செல்ல இன்னும் ஒருவர் வந்து சேருவார். இதில் கார்காரர் ஓர் இந்து. மோட்டார் சைக்கிளில் வந்தவர் கிருஸ்தவர். நடந்து வந்தவர் இஸ்லாமியர். மூவருக்கும் ஒரே நோக்கம்தான்.
அது சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டவுனுக்குச் செல்வது. நடந்து வந்தவர் கார்காரரிடம் லிஃப்ட் கேட்கிறார். அது பழுதாகிக்கிடக்கவே, மோட்டார் சைக்கிள்காரரிடம் செல்கிறார். அது பெட்ரோல் இல்லாமல் நின்று கொண்டிருக்கிறது. உடனே நடந்து வந்தவர் இருவரையும் அழைத்து, ”நாம் மூவரும் உடனே டவுனுக்குச் செல்ல ஒரு வழி சொல்கிறேன். உங்கள் வண்டியில் பெட்ரோல் இல்லை, ஆனால் காரில் பெட்ரோல் இருக்கிறது. எனவே, காரிலுள்ள பெட்ரோலை எடுத்து டூவீலரில் நிரப்புவோம். நாம் மூவரும் விரைவாக டவுனுக்குச் செல்ல இதுதான் வழி” என்கிறார். மற்ற இருவரும் மகிழ்ச்சி அடைந்து அப்படியே செய்கிறார்கள்.
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் ஒற்றுமைக்காகச் சித்தரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நமது கட்டு
மானத்துறையில் கண்கொண்டு பார்த்தோமெனில், ஒரு நாணயமான ஜாயின்ட் வென்சர்தான் அங்கு நிகழ்ந்திருக்கிறது என்று நம்மால் உணர முடியும். ஒருவரிடம் இல்லாத ஒரு விக்ஷயத்தை இன்னொருவர் கொடுத்து உதவ, அதற்குப் பதிலாக தன்னிடம் இல்லாத ஒன்றை எதிராளியிடமிருந்து பெறுவது என்கிற இந்த ஜாயின்ட் வென்சர் முறையை எத்தனை பாராட்டினாலும் தகும். யாருக்குமே நஷ்டம் ஏற்படாத, ஒன்றோடு ஒன்று கைகோர்த்து முன்னேறுகிற செயலான ஜாயின்ட் வென் சரை நாடாத பில்டர்கள் சிலர்தான். அறிமுக மற்றும் நடுத்தரக் கட்டுநர்களுக்கு வரப்பிரசாதமாகக் கருதப் பட்ட ஒரு விக்ஷயம்தான் ஜாயின்ட் வென்சர்.
ஏனெனில், எல்லா பில்டர்களாலும் சொந்தமாக
நிலத்தை வைத்திருக்க முடியாது. ஆகவே நிலம் வைத்திருப் பவரிடம் ஜாயின்ட் வென்சராக இணைந்து அவர்கள் நிலத்தில், நம்முடைய பணத்தில் வீடுகளைக் கட்டி ஒப்பந்தம் சொல்வதுபடி, குறிப்பிட்ட சதவிகிதத்தில் வீடுகளைப் பிரித்துக் கொள்ளும் இந்த முறை துவக்கத்தில் சிறு சிறு பில்டர்கள் கடை பிடித்தாலும், தற்போது பெரிய நிறுவனங்களும் ஜாயின்ட் வென்சருக்கு வாடிக்கையாளர்களைத் தேடி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், கட்டுமானத்துறையில் புதிதாக நுழைபவர்களுக்கு பெருமளவு ஊக்கமளிப்பது ஜாயின்ட் வென்சர் முறைதான்.
ஜாயின்ட் வென்சர் என்கிற வார்த்தை தமிழகக் கட்டுமானத்துறையில் பெரிய அளவில் பேசப்படாதபோதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இதுபோன்ற புராஜெக்டுகள் நடந்து வந்திருக்கின்றன. அதாவது, மொட்டை மாடியில் இரண்டு அறைகள் போடலாமே என வீட்டுச் சொந்தக்காரர் நினைப்பார். ஆனால், கையில் காசிருக்காது. அந்தப் பகுதியைச் சார்ந்த மேஸ்திரி ஒருவரை அழைத்து எஸ்டிமேக்ஷன் கேட்பார். மேஸ்திரி “ரூ.2 லட்சம் ஆகும்” என்பார். ”சரி, ஆகட்டும். ஆனால், என்னிடம் பணம் இல்லை. நீங்கள் அறையைக் கட்டியதும் அதை ஒரு வருட லீசுக்கு விடுகிறேன். வருபவரிடம் ரூ.2 லட்சம் வாங்கி உங்களிடம் தந்து விடுகிறேன்” என்பார்.
மேஸ்திரியும் சரி என்று வேலையை ஆரம்பிப்பார். தெரிந்த ஆட்களை வைத்துக் கொண்டு, தெரிந்த கடைகளிடமிருந்து கட்டுமானப் பொருட்களை வாங்கி, ஒரே மாதத்தில் அந்த இரண்டு அறைகளையும் கட்டிக் கொடுத்து விடுவார். அடுத்த மாதத்தில் வாடகைக்கு வருபவரிடமிருந்து பணத்தைப் பெற்று மேஸ்திரியின் கடனை அடைப்பார் வீட்டுச் சொந்தக்காரர். ஒரு வருடம் லீஸ் முடிவதற்குள் மாதாமாதம் சிறிது சிறிதாகப் பணத்தைச் சேர்த்து வாடகைதாரரின் பணத்தையும் வீட்டுக்காரர் அடைத்து விடுவார். அல்லது வாடகைதாரரின் குத்தகைக் காலத்தை நீட்டிக்கவும் செய்வார். ஆக, கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத வீட்டுக்காரர் எடுத்த ஜாயின்ட் வென்சரின் முடிவால் லாபம் அடைந்தது எத்தனை பேர்?
1. வீட்டுச் சொந்தக்காரர், 2, மேஸ்திரி, 3. ஒன்றரை மாதம் வேலை கிடைத்த வேலையாட்கள். 4. கட்டு
மானப் பொருட்களை விற்ற கடைக்காரர். 5. அவசரத்
திற்கு வீடு கிடைக்கப் பெற்ற வாடகைதாரர். ஆக, எத்தனை பேருக்கு லாபம் பாருங்கள்.
பணத்தை முழுவதுமாக சேர்த்துக் கொண்டுதான் வீட்டைக் கட்ட வேண்டும் என்று நினைத்தால் கொள்வதற்குச் சம்மதமா?
2. நிலத்திற்குச் சொந்தக்காரர் ஜாயின்ட் வென்சருக்கு எந்தெந்த நிர்ப்பந்தங்கள் காரணமாக சம்மதிக்கிறார்?
3. குறிப்பிட்ட நிலத்தின் மீதான அதன் அருகாண்மை மக்களின் கருத்து என்ன?
4. இதற்கு முன்பு இதே குடும்பம் வேறு பில்டருடன் ஜாயின்ட் வென்சரைப் பற்றி பேசியிருக்கிறதா? அந்தப் பேச்சு ஏன் முறிந்தது?
5. அங்குள்ள நிலமதிப்பு என்ன? அங்கு நம்முடைய புராஜெக்டின் மதிப்பு என்னவாக இருக்கும்?
6. ஜாயின்ட் வென்சருக்கு நிலம் தரக்கூடிய நபர் கோரும் மாற்றுப் பயன் என்ன?
7. நிலத்திற்குப் பதிலாக நாம் தரும் மாற்றுப்
பயனை ரூபாய் மதிப்பாக மாற்ஷூனால் அதன் மதிப்பு ஒரிஜினல் நில மதிப்பைவிட அதிகமானதா?
8. நிலத்தின் அணுகுசாலைகளின் தரம் மற்றும் அகலம் நம்முடைய புராஜெக்டுக்கு ஏற்புடையதா?
9. நிலத்தின் சொந்தக்காரர் நாணயமானவரா? அல்லது அடாவடிப் பேர்வழியா?
10. நாம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்
போது அடிக்கடி புராஜெக்ட் பணிகளை மேற்
பார்வையிட்டு நம்மை எரிச்சல்படுத்தாதவரா?
11. நம்முடைய நிதி சிக்கல்களில் குறைந்தபட்ச அளவாவது பங்கெடுத்து செயலாற்றுபவரா?
12. மாற்றுப் பயனாக வீடு மட்டுமல்லாது, பெரும் தொகையையும் கேட்கக் கூடியவரா?
13. ஒப்பந்தங்களின் க்ஷரத்துக்களை அடிக்கடி
மாற்றக்கூடியவரா?
14. புராஜெக்டின் நிலவரம் தெரியாமல், நம்முடைய கஷ்டமும் புரியாமல் அடிக்கடி வீட்டைக் கேட்டு நச்சரிப்பவரா?
15. மாற்றுப் பயனாக நாம் கட்டித்தரும் வீட்டின் ஸ்பெசிஃபிகேக்ஷன், கட்டுமானப்பொருட்களின் தரம், அளவு ஆகியவற்றை அவருக்குச் சாதகமாக மாற்றச் சொல்பவரா?
16. நிலத்தின் மற்ற உரிமையாளர்களுக்கு இந்த ஜாயின்ட் வென்சர் புராஜெக்ட் பற்றி சொல்லாமல்
மறைத்திருக்கிறாரா?
17. திடீரென உயர்ந்து விட்ட நில மதிப்பைச் சுட்டிக்காட்டி நம்மிடம் கூடுதல் மதிப்பை எதிர்
பார்ப்பவரா?
18. அடிக்கடி அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் பெரும்புள்ளிகளின் பெயரைச் சொல்லி மறைமுகமாக நம்மை அச்சுறுத்துபவரா?
19.நிலத்திற்கு செலுத்தவேண்டிய பல்வேறு வகையான வரி பாக்கிகள் மற்றும் வங்கிக் கடன்களைச் செலுத்தாதவரா?
20. புராஜெக்ட் லேஅவுட்டில் தனக்கென சிறப்பு முன்னுரிமைகளை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போகாதவரா?
என்பதைப் பற்றியெல்லாம் நாம் பலதும் அலசி ஆராய்ந்த பிறகுதான் ஜாயின்ட் வென்சரைப் பற்ஷூ யோசிக்கவே வேண்டும்.வில்லங்கமான மனையில் விவஸ்தையற்ற ஒரு நபரை ஜாயின்ட் வென்சரில் கூட்டாகச் சேர்த்து வீணாவதை விட வெறுமனே நாம் சும்மா இருந்து விடலாம்.
ஆனால், இந்தப் பிரச்சனைகள் பெரும்பாலான கட்டுநர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றன. ஒரு பக்கம் வர வேண்டிய நிதி வராமல் போவது, மறுபக்கம் நிலச் சொந்தக்காரர் நம்மை நெருக்குவது போன்றவற்றால், இனி ஜாயின்ட் வென்சர் பக்கமே போகக்கூடாது, சொந்த நிலத்தில் எப்பொழுது வீடு கட்டுகிறோமோ, அப்போது நாம் பில்ட ரானால் போதும் என்ற எண்ணம் கட்டுமானத் துறையில் புதிதாக நுழைபவர்களுக்கு வந்து விடுகிறது.
இதற்காக நாம் ஒட்டுமொத்த ஜாயின்ட் வென்சர் முறையைக் குறை சொல்ல முடியாது. தவறான ஆட்களை நம்முடைய கூட்டாகச் சேர்த்ததுதான் நம்முடைய தவறு.
ஜாயின்ட் வென்சரில் ஒரு கட்டுநர் நன்மதிப்பைப் பெற வேண்டுமெனில்,
1.நிலச் சொந்தக்காரரின் நிதி நெருக்கடியை பயன்படுத்தி அதில் லாபம் காண்பவராக நாம் இருக்கக்கூடாது.
2.அங்கு நிலவக்கூடிய சந்தை மதிப்பிலிருந்து குறைத்துக் காட்டக் கூடாது.
3.சொன்ன நேரத்தில், சொன்ன தரத்தில் வீட்டை ஒப்படைக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
4.ஜாயின்ட் வென்சர் ஒப்பந்தத்தின் போதும், ஒப்பந்தம் நிறைவடையும் போதும் தெளிவான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்.
5.நம்மால் நிலச் சொந்தக்காரர் பயன் பெற்ஷூருக்கிறார் என்ற எண்ணம் தவிர்த்து, நாம் அவரால் பயனடைந்திருக்கிறோம் என்ற எண்ணத்தினை மேலோங்கி வளரச் செய்ய வேண்டும்.
6.அதிக லாபம் என்கிற விக்ஷயத்தினைத் தவிர்த்து, நிலச் சொந்தக்காரருக்கு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டதைத் தவிர அதிகமாக நாம் மாற்றுப் பயனை செய்து தந்தால் நமக்கு ஏற்படும் நன்மதிப்பே தனி.
ஜாயின்ட் வென்சர் என்பது நமது சுமையை பிறருக்கு பாதி இறக்குவது அல்ல. ரிஸ்க்குகளை பாதியாக குறைத்துக் கொள்வது. ஆக, ஜாயின்ட் வென்சர் என்பது நல்ல, திடமான ஓடும் குதிரை. அதில் நமக்கு ஏறத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. குதிரைக்கு வலிக்காமல் சவாரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.