26/12/2021
பனைகிழங்கு
இரும்புச் சத்து, எடை குறைப்பு…
பனங்கிழங்கு சீசன் இதுதான்; மிஸ் பண்ணாதீங்க!
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை கிழங்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கிடைக்கும்.
இந்த கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
தமிழர் வாழும் அனைத்து பகுதிகளிளும் பொதுவாக காணப்படும் பனை மரம் ஏராளமான நன்மைகளை கொடுக்கிறது.
பனை மரத்தி்ல் இருந்து கிடைக்கும் நுங்கு,
பனம் பழம்,
பனை வெல்லம்,
பனை கல்கண்டு,
பதனி, பனை கிழங்கு
உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்த கொடுக்கிறது.
பனைமரம் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர் வளம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை கிழங்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
ஆண்டுதோறும்
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கிடைக்கும்.
பனை கிழங்கு தரும் நன்மைகள் :
பனை கிழங்கில், நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
இது,
குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும்,
இரத்தக் கொழுப்பைக் குறைக்கவும்,
இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும்.
மேலும்
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும்
உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.
செறிவு மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகின்றன.
பனை கிழங்கில் கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது. இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்கவும், எலும்பு கோளாறுகள் மற்றும் தசை சுருக்கங்களை தடுக்கவும் உதவுகிறது.
மெக்னீசியம் அதிகம் உள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது,
நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது,
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் புரதம் முக்கியமானது. பனை கிழங்கில், நல்ல அளவு புரதம் உள்ளது, இது திசுக்களை கட்டமைக்கவும், சரிசெய்யவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் மற்றும் தசையை உருவாக்கவும் அவசியம்.
பனை கிழங்கில், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.
இந்த பனை கிழங்கை வைத்து கிழங்கு உருண்டை என்ற பாரம்பரிய உணவை தயார் செய்யலாம். இந்த உணவு உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்கும்.
Www.facebook.com/nagavilluelectrical