VS Electrical & plumbing

  • Home
  • VS Electrical & plumbing

VS Electrical & plumbing Address

12/08/2025
11/03/2025

Mulankavil sports club
🛠️🪛⚡Focus Installed🪛🛠️
3 Phase Repaired⚡⚡

Call now to connect with business.

04/12/2019

christmas offer

2 GB memary card - 550/=
4 GB memary card - 680/=
4GB pendrive - 800/= Only

01/11/2019

கைதி!

லாஜிக் பற்றி எந்த குறுக்கு விசாரணையும் செய்யாமல் ஒரு திரைப்படத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வைப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதெப்படிங்க ஒரு கமிஷனர் ஆபிஸ் ஒட்டுமொத்தத்தகவல் தொடர்பில் இருந்து துண்டிக்கப்படுவது சாத்தியமாகும்? பட்டாசு வெடித்தாலே பக்கத்து வீட்டுக்காரன் எட்டிப்பார்ப்பான் ஒருத்தன் மெஷின் கன் வைத்து படபடவென்று சுட்டுட்டு இருக்கான் ஒருத்தருமா அந்த பக்கம் எட்டிபார்க்கலை ?போன்ற விமர்சன புத்திகளை திரைக்கதையின் சுவாரஸ்யம் மறக்கச் செய்கிறது என்றால் 'கைதி'யை வெற்றிப்படம் என்பதைவிட, தரமான படம் என்று சொல்லலாம். கையை கொடுங்க சார்! என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டலாம்.

ஒரு குற்றவாளி பிடிபட்டால் அவனின் பழைய ரெக்கார்டுகளை தூசு தட்டுவார்களே அதுபோல் கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷின் மாநகரத்தை ஓடிப்போய் பார்த்தேன். இப்படிதான் சில படங்கள், சில திறமைசாலிகள் சமகாலத்தில் ரசிகர்களின் பார்வைக்கு வராமாலே போய்விடுவார்கள். மாநகரம் அந்த பட்டியலில் போய்விட கூடாது லோகேஷ் அந்த துரதிருஷ்டத்தில் சேர்ந்துவிடக்கூடாது என்றே மாநகரத்தை பார்த்தேன்.

ஒரு ஸ்பெஷல் க்ரைம் ப்ராஞ்ச் ஆபிஸர் ,போதைபொருள் கடத்தும் கும்பல் இவர்களுக்கு மத்தியில் விபத்தாக மாட்டிக்கொள்ளும் லாரி டிரைவர் இந்த முக்கோணத்தனமான கதாபாத்திரங்கள்தான் படத்தின் அஸ்திவாரம் என்றாலும் படத்தைத் தூக்கி நிறுத்தும் இருதரப்பிலும் இருக்கும் உளவாளிகள், ஒரு கான்ஸ்டபிள், குடித்துவிட்டு போலீஸில் மாட்டிக்கொள்ளும் கல்லூரி மாணவர்கள் கும்பல், லாரி ஓனர் பையன், போன்ற கதாபாத்திரங்களால் கார்த்தியின் ஒன் மேன் ஷோ ஹீரோயிசத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது. மற்ற கேரக்டர்களில் இருக்கும் ரியால்டி அதீதமாக புனையப்படும் கதாநாயகன் பாத்திரத்தை அக்சப்ட் செய்ய வைக்கிறது. ஒரு படம் முடியவே கூடாது இப்படியே இன்னும் கொஞ்சம் த்ரில்லாக போகட்டும் என்றெல்லாம் 'கைதி' விரும்ப வைக்கிறது.

ஆபாச காட்சிகள், டாஸ்மாக் பார்களில் மஞ்சள் புடவை கட்டவைத்து ,குத்துப்பாட்டு ஆடவைத்து என்றெல்லாம் வழக்கமான மசாலாகளை தடவக்கூடாது என்று யோசித்திருப்பது ஒரு புதுவகைத்தனம்தான். என்னை ஏன் சார் ஸ்டேசனுக்கு ஏத்துனீங்க ?தாடி வைச்சிருக்கறவன் எல்லாம் கிரிமினல் இல்ல சார்! என்னும் லாரி டிரைவரின் பின்னே ஒரு கவிதைத்தனமான அப்பன் மகள் காத்திருப்பு காட்சிகள் மனதை நெகிழ செய்கிறது. இதுபோன்ற கைதியெல்லாம் அடிக்கடி தமிழ்சினிமாவில் வெளி வரவேண்டும். ஒரு தமிழ்சினிமா ரசிகனின் அதிகபட்ச எளிய ஆசை இவ்வளவுதான்.

05/10/2019

#இஃக்லூ: திரைப்பட விமர்சனம்

வாழ்க்கை எனும் நதி மரணம் எனும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு மேடுபள்ளங்களில் ஓட வேண்டியிருக்கு…

-(நா.முத்துக்குமார்)

சிவா ஹீரோவுக்கு ரெண்டு பெண்குழந்தைங்க (Twins) மூத்த பொண்ணு அம்மாவ பத்தி தெரிஞ்சக்கணும்னு ஆசைப்படும் போது சொல்லாத கதைய அவள் கோமால இருக்கும் போது சிவா கதை சொல்றான்.

தன்னோட காதல் கதையையும் பொண்ணோட அம்மா கதையையும் சொல்றான். நாம எல்லாருக்கும் இருக்கிற மாதிரி காதல் தான் இதிலயும் ஆனால் அந்த பொண்ணு செத்துருவாள்னு தெரிஞ்சா கல்யாணம் பண்ணிப்போமா…

சாவபோறவங்களுக்கு கடைசி ஆசைன்னு ஏதாச்சும் இருக்கும் இதுல ஹீரோயினுக்கு ஒரு ஐந்து ஆசை இருக்கும் அதுல ஒண்ணுதான் இஃக்லூ

இஃக்லூவ பத்தி சொல்றப்ப அத தன்னோட காதலனோடு ஒப்பிட்டு சொல்றது கவிதைதான். நமக்கு பிடிச்சவங்க நம்ம கூட இருக்கும் போது பாதையே இல்லன்னாலும் பயணிக்கலாம்…இந்த கதையில ஹீரோயின் சாகப்போறன்னு தெரிஞ்சாலும் அவள் கூட அந்த வலிய தாங்கிக்கிட்டு வாழ்றது. ரெண்டாவது வயித்துல வளர குழந்தைங்கள கலைக்காம இருக்கிறது. என எமோஷனலாக நிறைய விஷயங்களோடு பயணிக்கிறது.

ஒர் இடத்தை மையமா வைச்சு அதப்பத்தி ஒரு கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.நம்ம வாழ்க்கையில நடந்த விஷயங்கள இந்தப்படம் திரும்பி ஒரு டைம் பார்க்க வைக்கும்

முக்கியமா படத்தோட இன்னொரு சிறப்பம்சம் அரோல் கரோலியோட இசை, அப்புறம் அந்த ரெண்டு பெண் குழந்தைகள், ஒரு நல்ல படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்.

நினைவுகளின் வழியாகக் கூட

நீ உன் பால்யத்திற்கு

திரும்பிச் செல்லாதே

(நா. முத்துக்குமார்)

சிவாவோட காதல் கதை பல நினைவுகள சொல்லும்

2.1 A               01 CHARGER  02 USB POWER ADAPTERஒரே தடவயைில் ஒரு சாச்சரில் இரண்டு போன்கள் சாச் ஏற்றும் வசதி
21/06/2019

2.1 A
01 CHARGER 02 USB POWER ADAPTER
ஒரே தடவயைில் ஒரு சாச்சரில் இரண்டு போன்கள் சாச் ஏற்றும் வசதி

19/06/2019

உங்களது Ezcash சேவையினை எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்

Address

Kurupatan Road, . Mulankavil

Telephone

+94768303338

Website

Alerts

Be the first to know and let us send you an email when VS Electrical & plumbing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VS Electrical & plumbing:

  • Want your business to be the top-listed Contractor?

Share