05/09/2018
வணக்கம் செங்கல்பட்டு..!
வாசிப்பு என்னும் தொடர் செயல்பாட்டை முன்னெடுக்கும் திட்டத்தின் அடுத்த கட்ட அழைப்பு, சென்னையை அடுத்துள்ள காஞ்சி மாவட்டத்தின் பெரிய நகராட்சியான செங்கல்பட்டு வாழ் சக நண்பர்களுக்கு..!
ஒருகாலத்தில் இந்தப் பகுதியிலுள்ள நீர்நிலைகளில் எல்லாம் செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்த காரணத்தால் செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டு பின் மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படுவதும், விஜயநகரப் பேரரசின் தலைநகராக சில காலம் இருந்தது என்று கூறப்படுவதுமான செங்கை நகரில் கூட்டங்கள் நடத்துவதில் #வாசகசாலை உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறது.
முன்னரே அறிவிப்பு செய்திருந்தபடி, இவ்வாண்டு முதல் வாசகசாலை சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பிற இடங்களிலும் தனது மாதாந்திர கூட்டங்களை நடத்த இருக்கிறது. ..!
அந்த வரிசையில் முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் துவங்கி மதுரை,கோயம்புத்தூர், திருச்சி, வேலூர்,திருப்பூர், விழுப்புரம், ஈரோடு, சேலம், தர்மபுரி,தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை & பெங்களூரு (கர்நாடகா) ஆகிய இடங்களில் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது இம்மாதம் முதல் மேலும் சில மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அவ்வரிசையில் தமிழகத்தில் மேலும் ஒரு ஒரு முக்கிய நகரை இந்த செயல்பாட்டில் எங்களுடன் இணைத்துக் கொள்கிறோம்.
செங்கல்பட்டில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ள தொடர் கூட்டங்களுக்காக, எங்களுடன் கைகோர்த்துக் கொள்ள செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வாழ் அன்பு நண்பர்களுக்கு பொதுவான அழைப்பு விடுக்கிறோம். இது நம் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு பொதுவான பணியாகத்தான் கருதுகிறோம்.
சென்னையில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களும், உங்களைப் போன்ற புதிய நண்பர்களின் ஆர்வமும் ஒன்றிணையும் பொழுது, இந்த விஷயத்தில் சிறப்பான ஒரு முன்னெடுப்பைச் செய்ய முடியுமென்ற நம்பிக்கை கண்டிப்பாக எங்களுக்கு உள்ளது.
எனவே இந்தப் பணியில் வாசகசாலை யோடு இணைந்து செயல்பட விரும்பும் நண்பர்கள், இந்த நிலைத்தகவலின் இறுதியில் உள்ள அலைபேசி எண்களுக்கு உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.
அதேநேரம் மற்ற நண்பர்கள் இந்த தகவல் நிறைய நண்பர்களுக்குச் சென்று சேரும் வகையில் தங்களது முகநூல் / வாட்ஸப் / டிவிட்டர் பக்கங்களில் பகிரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக செங்கல்பட்டு சார்ந்த முகநூல் பக்கங்கள் / குழுக்களை சென்றடைந்தால் மிகவும் சிறப்பு. நன்றி. மகிழ்ச்சி..!
வாட்ஸப்:
கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979
மாரி செல்வம் - 9600348630