Ambika Enterprises - Construction Material Supplier

Ambika Enterprises - Construction Material Supplier Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ambika Enterprises - Construction Material Supplier, No. 54/70, Jones Road , saidapet, Chennai/, next to Jones Road Bridge, Chennai.

16/10/2020
22/12/2018

Give me some suggestions
Risk and non risk portion
For paint business

12/06/2018



What is msand???
Manufactured sand

மாற்று மணல்(M SAND) கட்டடத்திற்கு நல்லதா?கெடுதல் ஏதும் வராதா?பலம் மிக்கதா?கான்கிரீட் கீழே விழுந்திடாதா?பூச்சுக்கு சரியா வருமா?ஆற்றுமணலை விட பலம் குறைவுதானே?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள்; சந்தேகங்கள்.அவற்றுக்கான பதில்களும்,விளக்கமும்....

1.மணலின் நிறத்திலும் கருப்பு நிறத்திலும் வருகிறதே,இதில் எது மாற்றுமணல்?
*பாறையின் மேலடுக்குகளில் கிடைக்கக் கூடிய வெளிர் நிற கற்களை அரைத்து வரக்கூடியது மணல் நிறத்தில் இருக்கும்.கீழடுக்குகளில் உள்ள கரும்பாறைகளை அரைத்தால் கிடைக்கக் கூடியது கருப்பு நிறத்தில் இருக்கும்.இரண்டுமே மாற்றுமணல்தான்.இருந்த போதும் ஒப்பீட்டளவில் கருப்புமணல்தான் பலம் அதிகமுள்ளது.வெளிர்நிற மாற்றுமணல் சற்று பலம் குறைந்தது.எனவே கான்கிரீட் போன்றவற்றுக்கு கருப்புமணலே சிறந்தது. செங்கல்கட்டு போன்ற பணிகளுக்கு வெளிர்நிற மாற்றுமணலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

2.மாற்றுமணல் எங்கிருந்து வருகிறது?
*மாற்றுமணல் என்பது கற்பாறைகளை கிரசர் மிசின் மூலம் அரைத்து பொடியாக்கி தயாரிக்கப் படுகிறது.ஏற்கனவே கற்களை மிசின் மூலம் உடைத்து 40mm,20mm,12mm,6mm என பல அளவுகளில் ஜல்லிக்கற்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கப் பட்டு கட்டடப் பணியில் கான்கிரீட் போடவும் தாரோடு கலந்து சாலை அமைப்புப் பணிகளிலும் பயன்படுத்தப் படுகிறது என்பதை நாம் அறிவோம். இப்போது அதைவிட சிறிதாக மணல் அளவில் உடைக்கப் படுவதே மாற்றுமணல். எளிமையாக சொன்னால் சிறிய சைஸ் ஜல்லிக்கல்தான் மாற்றுமணல்.

3.கிரசர் தூசி அல்லது கிரசர் டஸ்ட்-க்கும் எம் சாண்டுக்கும் என்ன வித்தியாசம்?
* கிரசர் தூசி என்பது ஜல்லி உடைக்கும் போது வரக்கூடிய கழிவுப் பொருள்.அது கட்டட வேலைக்கு உகந்ததல்ல.ஆனால் M SAND என்பது சிறியஜல்லி போல் உடைக்கப் பட்டு தண்ணீர் தொட்டியில் சுற்றும் சல்லடையின் மூலம் அலசப்பட்டு அதில் உள்ள கிரசர்தூசி நீக்கப் பட்டு சுத்தமான மணல் போல தயாரிக்கப் படுகிறது.இதனால் M SANDல் கிரசர்தூசி என்பதே இருக்காது.

4.M SAND ஆற்று மணல் போல. கலவைக்கு பலம்(STRENGTH) தருமா?
* நிச்சயமாக M SAND நல்ல பலம் மிக்க கான்கிரீட்/கலவையை தரக் கூடியது.ஆற்றுமணல் சேர்த்த கான்கிரீட்டை விட
M SAND சேர்த்த கான்கிரீட் கூடுதல் பலம் மிக்கது என்பது ஆய்வக சோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.மேலும் ஆற்றுமணலில் இயற்கையாகவே கலந்து வரக்கூடிய CHEMICAL IMPURITIES மாற்றுமணலில் இருக்காது.எனவே ஆற்றுமணலை விட மாற்றுமணல் தரம்மிக்க கலவையை தரக் கூடியது.

5.மாற்றுமணலால் கட்டப்பட்ட கட்டடங்கள் நீடித்து நிற்குமா?
* நிச்சயமாக நீடித்து நிற்கும். தமிழ்நாட்டிற்குத்தான் மாற்றுமணல் புதிதே தவிர (கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கூட சில ஆண்டுகளாக உபயோகிக்கப் படுகிறது)பல மாநிலங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பே புழக்கத்திற்கு வந்து விட்டது. வெளிநாடுகளில் நீண்ட காலமாக உபயோகத்தில் உள்ளது.எனவே மாற்றுமணல் பயன்படுத்தப் பட்ட கட்டடங்கள் பல ஆண்டுகளாக எந்த சேதமுமின்றி நீடித்து நிற்கிறதென்பது கண்கூடான உண்மை.

6.மாற்றுமணலை பூச்சுக்கு பயன் படுத்த முடியுமா?
* இயற்கை மணலில் இருக்கக் கூடிய வண்டல்,களிமண் போன்றவை மாற்றுமணலில் இருக்காது.இதனால் பூச்சுக்கலவையின் ஒட்டும் தன்மை சற்று குறைவாகவே இருக்கும்.அந்த குறையை சரி செய்யும் வகையில் தற்போது FINENESS அதிகமுள்ள P SAND(PLASTERING SAND) தயாரிக்கப் படுகிறது.மேலும் சிறப்பான பூச்சை தரக்கூடிய சில ADDITIVESகளும் விற்பனைக்கு வந்துள்ளது.வருங்காலத்தில் இன்னும் தரமான பூச்சினை உறுதி செய்யும் பொருட்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

7.மாற்றுமணலால் வேறு நன்மைகள் ஏதும் உள்ளதா?
*ஆற்றுமணலை அளவின்றி அள்ளுவதன் மூலம் விவசாயம், குடிநீர்,நிலத்தடிநீர் போன்றவை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி இயற்கைவளங்கள் குறைந்து சுற்றுச் சூழல் சீர் கெட்டு நம் வருங்கால சந்ததிகளும் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆகவே இயற்கைவளத்தை காத்து நல்லதொரு புவிச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமெனில் மாற்று கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டுவது காலத்தின் கட்டாயம்.அந்த வகையில்,மாற்றுமணலை எந்த வித மனக்குழப்பமுமின்றி கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி தரமான பலம்மிக்க கட்டுமானங்களை கட்டலாம்.

Ambika Enterprises
Construction Materials supplier
Chennai
SELVAM.R
Contact no.7200030407 / 8610233522

09/06/2018
09/06/2018

Address

No. 54/70, Jones Road , Saidapet, Chennai/, Next To Jones Road Bridge
Chennai
600015

Opening Hours

Monday 9am - 5pm
6pm - 7pm
Tuesday 9am - 5pm
6pm - 7pm
Wednesday 9am - 5pm
6pm - 7pm
Thursday 9am - 5pm
6pm - 7pm
Friday 9am - 5pm
6pm - 7pm
Saturday 9am - 5pm
6pm - 7pm

Telephone

7200030407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambika Enterprises - Construction Material Supplier posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share