22/07/2026
20 ஆண்டுகாலக் கனவு நனவானது: பனை மர மறுநடவில் மகத்தான வெற்றி! 🌴✨
தென்னை, ஈச்சை மற்றும் பல்வேறு அலங்கார பனை மரங்களை வேரோடு பெயர்த்து (Tree Transplantation) வெற்றிகரமாக மறுநடவு செய்த அனுபவம் எங்களுக்கு உண்டு. ஆனால், எங்களின் பாரம்பரியப் பெருமையாகவும், அளப்பரிய நன்மைகளைத் தரும் மரமாகவும் விளங்கும் பனை மரங்களை மறுநடவு செய்வதில் பல ஆண்டுகளாகத் தொடர் தோல்விகளையும் சவால்களையுமே சந்தித்து வந்தோம்.
இருப்பினும் முயற்சியைக் கைவிடாமல், எங்கள் அனுபவம் வாய்ந்த தோட்டக்கலை வல்லுநர்கள் குழு 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆராய்ச்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது.
அதன் பலனாக, கடந்த ஆண்டு வேரோடு பெயர்த்து மறுநடவு செய்யப்பட்ட 50 பனை மரங்களில், பெரும்பாலான மரங்கள் பிழைத்து, தற்போது ஆரோக்கியமாகப் புதிய குருத்துகளுடன் வளரத் தொடங்கியுள்ளன!
இந்த வெற்றி, "பனை மரங்களையும் வேரோடு பெயர்த்து மறுநடவு செய்து காப்பாற்ற முடியும்" என்ற உறுதியான நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளது. அந்த நம்பிக்கையோடு, இந்த ஆண்டும் பல பிரம்மாண்டமான பனை மரங்களை வெற்றிகரமாக மறுநடவு செய்து வருகிறோம்.
மரங்களைக் காப்போம்!
இயற்கையைப் பேணுவோம் !!
தொடர்புக்கு 9444176934, 7338854934.
Palm tree transplantation in Chennai/ palmyra tree transplanting.