Traditional Builders

Traditional Builders >PLANNING
>DESIGN
>CONSTRUCTION
>ELEVATION
>CONTRACTOR

VPV PLAZA, BHAVANI. ERODE..

For survey work contact us
17/07/2021

For survey work contact us

17/07/2021

Low cost housing contact us ...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
15/01/2015

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

அசையாம நல்ல ஸ்டாங்கா இருக்கணும்பா கட்டிடம் “ என்பது தான் இதுவரை நாம் கேட்ட வாசகம். இந்த வாசகத்தை அர்த்தமிழக்கச் செய்யப்ப...
11/01/2015

அசையாம நல்ல ஸ்டாங்கா இருக்கணும்பா கட்டிடம் “ என்பது தான் இதுவரை நாம் கேட்ட வாசகம். இந்த வாசகத்தை அர்த்தமிழக்கச் செய்யப்போகிறது துபாயில் உருவாக இருக்கும் புதிய கட்டிடம்

☆ Like ✔ Comment ✔ Share ☆

Traditional Builders

எண்பது மாடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் ஒவ்வோர் மாடியும் நிலையாக இல்லாமல் சுற்றக் கூடிய வகையில் அமையப் போகிறதாம்.

இந்த சிந்தனையின் பின்னால் இருக்கும் ரொட்டேட்டிங் டவர் டெக்னாலஜி கம்பெனியின் நிறுவனர் டேவிட் ஃபிஷர் , வாழ்க்கையே நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது, கட்டிடம் மட்டும் நிலையாய் இருப்பது ஏன் என தத்துவக் கிச்சுக் கிச்சையும் மூட்டுகிறார்.

வலிமையான காங்கிரீட் மையத்திலிருந்து இந்த மாடிகள் சுழலுமாம். ஒரு மாடியை நீங்கள் வாங்கினால் அந்த மாடியை உங்கள் விருப்பம் போல அசைத்துக் கொள்ளலாமாம்.

வெயில் முகத்தில் அடிக்கிறது என்றால் மாடியை கொஞ்சம் அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொள்ளலாம். ஏதோ சத்தம் கேட்கிறதே என்று நாம் ஓடத் தேவையில்லை, வீட்டை கொஞ்சம் சுற்றவிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த கட்டிடத்துக்குத் தேவையான முழு மின் தேவையையும் அந்தக் கட்டிடமே சூரிய ஒளியிலிருந்து தயாரித்துக் கொள்ளும் வகையில் இந்த கட்டிடம் தயாராகப் போகிறது என்பது சுவாரஸ்யச் செய்தி.

நீச்சல் குளம், தோட்டம் என வசதிகள் இருப்பதுடன் காரையும் தங்கள் மாடிக்குப் பக்கத்திலேயே கொண்டு பார்க் செய்யவும் வசதி செய்யப்படுமாம்.

ஆனால், வீட்டுக்குத் தேவையான தண்ணீர் பைப் களை எப்படி மாட்டுவது என்பதில் தான் பெரிய சிக்கலே இருக்கிறதாம். ஆனாலும் அதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன என்கிறார்கள்.

355 மில்லியன் பவுண்ட் செலவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட இருக்கிறதாம். அமெரிக்காவின் 9/11 புகழ் இரட்டைக் கோபுர தலைமைப் பொறியாளர் லெஸ்லி ராபட்சன் தான் இந்த திட்டத்தின் தொழில்நுட்ப வழிகாட்டியாம்.

கட்டிடம் எல்லா பெரிய கட்டிடங்களையும் போல பாதுகாப்பாய் இருக்கும் ! கவலையே வேண்டாம் என்கிறார் டேவிட் ஃபிஷர். வாங்க விருப்பமுடையோர் அணுகலாமாம். !

Like Us & Get More Updates

https://www.facebook.com/TraditionalBuilder

Mery Mery chritmas....
25/12/2014

Mery Mery chritmas....

தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..!!!!☆ Like  ✔ Comment  ✔ Share ☆ Traditional Buildersஉ...
10/12/2014

தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..!!!!

☆ Like ✔ Comment ✔ Share ☆

Traditional Builders

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..!

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் "மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது . அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது. இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள்.

இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.அனிஷ் குமார் என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள "இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது . " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை .

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தையுமாவது கட்டிக்காப்போம்..!

இந்த இசைத் தூண்கள் அமைந்துள்ள கோவில் பற்றிய தகவல்கள் கீழே குடுக்கப் பட்டுள்ளது.

நெல்லையப்பர் - காந்திமதி கோயில் நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும் தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள்.

தானமைவு கான்கிரீட்,,,,,,,,,,,,,☆ Like ✔✅✔ Comment ✔✅✔ Share ☆ Traditional Builders இருபத்தோராம் நூற்றாண்டுக்கான இணையற்ற ...
09/11/2014

தானமைவு கான்கிரீட்,,,,,,,,,,,,,

☆ Like ✔✅✔ Comment ✔✅✔ Share ☆

Traditional Builders

இருபத்தோராம் நூற்றாண்டுக்கான இணையற்ற தொழிற்நுட்பம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். தீவிரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்ட உலக வர்த்தக மையம் மீண்டும் எழுந்து நிற்பது இந்த எஸ்சிசியின் புண்ணியத்தால்தான். இந்த எஸ்சிசியின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்தான். இதில் அப்படி என்ன விசேக்ஷம் இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். நேர்த்தியான கலை வேலைப்பாடுகளை உலோகங்களில் எப்படி உருவாக்குகிறார்கள்? உலோகங்களைத் தண்ணீர் போல் உருக்குவார்கள்.அவற்றை அச்சுக்களில் வார்ப்பார்கள். உலோகம் அச்சுக்களுக்குள் புகுந்து ஓடி நிறைந்து இறுகிக் கெட்டியாகி வடிவம் பெறும். ஏறக்குறைய அதே போன்ற செயல்பாடுகளால் உருவாவதுதான் இந்த எஸ்.சி.சி. எப்படி வந்தது எஸ்.சி.சி? ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டு ஏகப்பட்ட காலம் ஆகிறது. இது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? என்கிற கதையே படு சுவாரசியமானதுதான். 1980களிலேயே இதனை ஜப்பானியர்கள் உருவாக்கிப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குக் காரணம் மனித வளம். சரியாகச் சொன்னால் மனித வளப் பற்றாக்குறை. திறமை பெற்ற ஊழியர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாய்ப் போகவே ஜப்பானியர்கள் குறைந்த ஆட்களைக் கொண்டு மளமளவென்று வேலைகளை முடிப்பதற்காகக் கண்டுபிடித்ததுதான் இந்த ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட். கான்கிரீட் இடப்படும்போது கவனித்திருப்பீர்கள். கம்பிக் கட்டு மானத்திற்கு உள்ளே கான்கிரீட் சீராகப் பரவ வேண்டும். இதற்காக ஆட்களை வைத்து நீண்ட கம்பிகளால் குத்திக் குத்திக் கான்கிரீட்டைச் செலுத்துவார்கள்.இப்படிக் கான்கிரீட்டைப் பரவச் செய்வதற்கு அதிக அளவில் ஆள்பலம் தேவைப்பட்டது. அதற்கேற்ற வகையில் ஆட்கள் கிடைக்க வில்லை. வேலைகள் தேங்கி நின்றன. கம்பியால் குத்திவிடுவதற்குத் தேவையில்லாத விதத்தில் கான்கிரீட் தானே ஓடிப் பரவி நிரம்பினால் எப்படி இருக்கும்?இப்படி ஒரு கேள்விக்கான விடைதான் ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட். இதில் தண்ணீர் கசிந்து வெளியேறும் பிரச்சனை இல்லை. கான்கிரீட் உதிரியாகாது. மாறாக ஒருங்கிணைந்து உறுதியாகும். வலு அதிகமாகும். வேலை விரைவில் முடியும். காற்றுக் குமிழ்கள் தங்காது. வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் நிற்காது. இத்தனை நன்மைகள் இந்த ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டில் உண்டு. அதனால்தான் இதற்கு அப்படியொரு வரவேற்பு. ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டினால் ஏற்படும் நன்மைகள் நிறைய உண்டு.கான்கிரீட்டை இடும் வேலை வெகு எளிதாக முடிந்துவிடும். குறைந்த நேரமே போதும். ஆட்களும் குறைவான எண்ணிக்கையிலேயே தேவைப்படுவார்கள். செலவுகள் குறையும். ஆதாயம் அதிகரிக்கும். இவை எல்லாவற்றையும் விடக் கூடுதல் கவனத்தை ஈர்க்கும் விக்ஷயம் என்னவென்றால் இந்த வகைக் கான்கிரீட்டை இடுவதால் ஒலியினால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு அறவே இருக்காது. ஏன் தெரியுமா? இங்கு வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவது கிடையாது.வைப்ரேட்டர்களை இயக்குவதால் ஏற்படும் இரைச்சல் இருக்கவே இருக்காது. இதுவே பெரிய விஷயம் இல்லையா? எப்படிப் பாய்கிறது? ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட் எப்படித் தானாகவே பாத்திகளில் தண்ணீர் பாய்வது மாதிரி பாய்ந்து நிரம்புகிறது? இதற்குக் காரணம் அத்துடன் கலக்கப்படும் வேதிப்பொருட்களும் இதர சேர்மானங்களும்தான். பாலிகார்பாக்சிலேட் பாலிமர்கள் என்று அழைக்கப்படும் பன்மங்களே இந்தச் சீரான பாய்ச்சலுக்குக் காரணமாக அமைகின்றன. கலவையின் பிசுபிசுப்புத் தன்மையை விரும்பிய அளவில் நிலைநிறுத்த உதவும் வேதிப் பொருட்களும் தகுந்த அளவில் கலக்கப்படுகின்றன.மேலும், தண்ணீருக்கும் சிமெண்டுக்குமான விகிதமும் எளிதான பாய்ச்சலை உறுதி செய்கிறது. பயன்படுத்தப்படும் சல்லிகளின் அளவும் நுட்ப மானதாக அமைய வேண்டும் என்பது இன்னொரு தேவை. இவற்றிற்கெல்லாம் பண அடிப்படையில் கணக்குப் பார்த்தால் கட்டுமானச் செலவு அதிகமாகத்தான் ஆகும் என்பது உண்மை. இந்தக் காரணத்திற் காகவே எல்லா இடங்களிலும் ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட் பயன்படுத்தப்படுவதில்லை.பணச் செலவு அதிகமாக ஆகுமானால் அந்தத் தொழிற்நுட்பத்தால் பலன் இல்லையே என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை.ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டின் மற்ற நன்மைகளையும் கருத்திற் கொண்டால் இந்தச் செலவு நியாயமானதே. உயரமான கட்டடங்களைக் கட்ட வேண்டுமானால் அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள் அதிக வலுவுடன் உருவாக்கப்பட வேண்டும். கான்கிரீட்டின் இறுக்கம் சதுரஅங்குலத்திற்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பவுண்ட் அளவுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப் பார்கள்.உலகின் மிக உயர்ந்த கட்டடங்கள் பலவற்றை இந்த விதிக்கு உட்பட்டுத்தான் அமைப்பார்கள். இதனை மிஞ்சும் விதத்தில் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பவுண்ட் அளவிற்கு இறுக்கம் இருக்குமாறு அமைத்துத்தான் புதிய உலக வணிக வளாகத்தைக் கட்டுகிறார்கள். இது 102 மாடிகளைக் கொண்டதாக அமையும். கட்டடங்களின் உயரம் அதிகமாக ஆக இன்னொரு தொல்லையும் கூடவே வரும். அவ்வளவு உயரத்திற்குக் கான்கிரீட்டைப் பம்ப் செய்வது என்பது கடினமான காரியமாக இருக்கும். ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டில் அந்தத் தொல்லை இல்லை.உயரத்திற்குப் பம்ப் செய்யும் வேலையை வெகு எளிதாகச் செய்யலாம். தடங்கல் இருக்காது. ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டின் வரவேற்பு கட்டுமானத்துறையில் ஒரு திருப்புமுனை என்று நிச்சயமாக சொல்லலாம்.

Like Us & Get More Updates.........

https://www.facebook.com/TraditionalBuilder

எகிறும் கட்டுமான செலவு குறைப்பது எப்படி?.....☆ Like ✔✅✔ Comment ✔✅✔ Share ☆ Traditional Buildersகட்டுமான பொருளை தேர்வு ச...
09/11/2014

எகிறும் கட்டுமான செலவு குறைப்பது எப்படி?.....

☆ Like ✔✅✔ Comment ✔✅✔ Share ☆

Traditional Builders

கட்டுமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து கட்டிடத்தை வடிவமைப்பது வரை ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து திட்டமிட வேண்டும். வீடு கட்டுவது என்பது நம்மில் பெரும்பாலனோர்க்கு கனவாகவே இருப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று மனையின் விலை. மற்றொன்று கட்டுமான பொருட்களின் ஜெட்வேக ஏற்றம். இந்த இரண்டும் தான் வீடு கட்டுவோர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இதே போல ஏற்கனவே வீடு கட்டியவர்களிடம் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் கூறும் கருத்துக்கள் மேலும் பயத்தை உருவாக்கும்.
இத்தனை லட்சத்திற்குள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நினைத்ததை விட பல மடங்கு செலவாகிவிட்டது என்று புலம்புவார்கள்.

இதற்கு எல்லாம் அடிப்படை காரணம் சரியாக திட்டமிடல் இல்லாதது தான். மனையின் விலையை பொறுத்த வரை நம் கையில் ஒன்றும் இல்லை. காரணம் சந்தை மதிப்பு, அருகாமையில் உள்ள சைட் விற்பனை விலை இவற்றை பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

நாம் வாங்க நினைக்கும் சைட்டின் அருகாமையில் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட சைட்டின் விலையை விட குறைந்த பட்சம் 10 சதவீதம் கூடுதலாக தான் நாம் வாங்க முடியும். இது தான் இன்றைய ரியல் எஸ்டேட் நிலைமை. ஆனால் கட்டுமானத்தை பொறுத்த வரை நாம் தான் எல்லாமே. ஆனால் அந்த அளவுக்கு நாம் முடிவு எடுக்கின்றோமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.கட்டுமானத்தை பொறுத்த வரை செலவுகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாளலாம்.

அதற்கு திட்டமிடுவது மிகவும் அவசியமாகின்றது. கட்டுமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து கட்டிடத்தை வடிவமைப்பது வரை ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து திட்டமிட வேண்டும். குறிப்பாக நவீன தொழில் நுட்பங்களை கையாள்வதன் மூலம் செலவினங்களை குறைக்க முடியும். இதே போல வழக்கமாக கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்தினாலும் செலவினங்களை சற்று குறைக்க முடியும்.

வராந்தா,மாடி கைப்பிடி சுவர்,பாத்ரூம்,வெண்டிலேட்டர் இவற்றில் கிரில் அமைப்பதற்கு பதிலாக வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கிராதி அமைப்பதன் மூலம் பெரும் பங்கு செலவை கட்டுப்படுத்தலாம். இதே போல செங்கல்லை கொண்டு 9 அங்குல சுவர் கட்டுவதற்கு பதிலாக எலிபொறி கட்டுமானம் எனும் வகையை பின்பற்றினால் 25 சதவீத அளவு செங்கற்களின் அளவை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம். தரை அமைப்பதற்கு மார்பிள், கிரானைட் இவற்றிக்கு மாற்றாக லினோலியம், வினைல் முதலியவற்றால் ஆன தரையை அமைக்கலாம்.

இதே போல தேக்கு மரங்களுக்கு பதிலாக நாட்டு மரங்களை பயன்படுத்தி தேக்கு பாலீஸ் அடித்தால் அசல் தேக்கு மரம் போலவே காட்சியளிக்கும். வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டை பயன்படுத்தி உத்திரங்கள்(லிண்டெல்) அமைக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக செங்கற்களை குத்தாக அடுக்கி அவற்றின் வெற்றிடத்தில் இரும்பு கம்பிகளை இணைப்பதன் மூலம் சிக்கனமாக அதிக பாரம் தாங்க கூடிய உத்திரங்கள் உருவாக்க முடியும். இதே போல சாதாரண செங்கற்களுக்கு பதிலாக பிளைஆஷ் செங்கற்களை பயன்படுத்தலாம்.

இந்த செங்கற்களால் பூச்சு வேலையின் போது 10 சதவீத சிமெண்ட் மிச்சப்படுத்த முடியும். இதே போல சிமெண்ட் கலவை பயன்படுத்தாமல் சுவர்களை இணைக்கும் இன்டர்லாக்கிங் கற்கள் தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.இன்டர்லாக்கிங் கற்களை பயன்படுத்துவதன் மூலமாக கூலி ஆட்கள் செலவை கட்டுப்படுத்த முடியும். சிமென்ட் கலவைக்கு பயன்படுத்தும் மணல் விலை தினந்தோறும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவது வழக்கமாகும். இதை தவிர்க்க செயற்கை மணல் என்று கூறப்படும் கல்குவாரிகளிலிருந்து பெறப்படும் மணல்துகள்களை பயன்படுத்தி கட்டுமானத்தை மேற்கொள்ளலாம்.

ஆற்றுமணலுடன் மூன்றில் ஒரு பங்கு செயற்கை மணல் சேர்த்தால் கட்டுமானத்தின் தரம் பல மடங்கு அதிகரிக்கும். இதே போல ஒவ்வொரு பாத்ரூமிற்கும் ஒரு வாட்டர் ஹீட்டர் பொருத்தும் நடைமுறை இருக்கின்றது. இதற்கு பதிலாக ஒரே ஒரு சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் போது அனைத்து பாத்ரூம்களுக்கும் சுடுதண்ணீர் கிடைத்துவிடும்.

தண்ணீர் தொட்டி, செப்டிக்டேங்க் ஆகியவற்றை செங்கற்கள் கொண்டு கட்டுமானத்தை மேற்கொள்வதை தவிர்த்து தற்போது சந்தைக்கு வந்துள்ள பிளாஸ்டிக் தொட்டிகளை வாங்கி பயன்படுத்தலாம். இதனால் கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான செலவு ஆகியவை பெரும் பகுதி குறையும். இப்படி ஒவ்வொன்றையும் நன்கு திட்டமிட்டு செயல்பட்டால் வீடு கட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டிற்குள் வீட்டை கட்டி சந்தோஷமாக குடியேறிவிடலாம்.

Like Us & Get More Updates.........

https://www.facebook.com/TraditionalBuilder

6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள்...........☆ Like ✔✅✔ Comment ✔✅✔ Share ☆ Traditional Buildersபீஜிங்:இரண்டு ரூம், ஒரு ...
08/11/2014

6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள்...........

☆ Like ✔✅✔ Comment ✔✅✔ Share ☆

Traditional Builders

பீஜிங்:இரண்டு ரூம், ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு டாய்லெட் வைத்து சாதாரணமாக ஒரு வீடு கட்டுவதற்கே நமக்கு கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்கள் ஆகிவிடுகிறது. 15 மாடி ஓட்டலை ஆறே நாளில் கட்டி முடித்து அசத்தியிருக்கின்றனர் சீன கட்டிட தொழிலாளர்கள்.சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்ஷா நகரில்தான் இந்த சாதனை நடத்தப்பட்டுள்ளது. இங்கு ‘அர்க்’ என்ற பெயரில் 15 மாடி ஓட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டிடத்தை ஒரே வாரத்தில் முடித்து தருவதாக ஒப்புக்கொண்டது பிராட் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி என்ற கட்டுமான நிறுவனம்.

அதிரடியாக வேலைகள் தொடங்கப்பட்டன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் களமிறங்கினர். இரவு, பகலாக நடந்தது வேலை. ஐந்து நாள் 16 மணி நேரம்.. அதாவது மொத்தம் 136 மணி நேரத்தில் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு ஓட்டல் ஓனரின் கையில் சாவியை கொடுத்துவிட்டார் கட்டுமான அதிபர்.
இந்த இமாலய சாதனை பற்றி கட்டுமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இப்படித்தான் பில்டிங் கட்ட வேண்டும் என்று பக்காவாக பிளான் செய்துவிட்டால் கட்டுவதற்கு தாமதம் ஆகாது. எத்தனை தொழிலாளர்கள் தேவை, என்னென்ன பொருட்கள் தேவை என்பதையும் துல்லியமாக திட்டமிட்டால் தாமதத்துக்கு வழியே இல்லை. மேலும், ஏற்கனவே கட்டி தயாராக வைத்திருக்கும் பொருட்களை அசெம்பிள் செய்துதான் இக்கட்டிடம் பெரும்பாலும் கட்டப்பட்டிருக்கிறது. வீடு கட்டும் செலவில் கூலிதான் அதிகமாகும். விறுவிறுவென அபார வேகத்தில் வேலை முடிவதால் கூலி குறையும். வீடு கட்டும் செலவும் கணிசமாக குறையும்.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தொழிலாளர்கள் அனைவரும் பரபரப்புடன்தான் வேலை பார்த்தார்களே தவிர, பதற்றத்துடன் அல்ல. சிறிய விபத்துகூட இல்லாமல் பணி முடிந்திருக்கிறது.சீக்கிரம் முடித்ததால் ஏனோதானோ என கட்டியதாக நினைக்காதீர்கள். வெளி சத்தம் உள்ளே கேட்காத வகையில் சவுண்ட் ப்ரூப் கொண்டது இக்கட்டிடம். தீ பிடித்தாலும் பாதிக்கப்படாது. தரைக்கு மேலே கட்டிடம் கட்டுவதைத்தான் விரைவுபடுத்த முடியும். பேஸ்மென்ட் போடுவதில் இந்த வேகத்தை காட்டுவது ஆபத்து. அதனால், ஒரு மாதம் பொறுமையாக, ஆனால் மிகவும் வலிமையாக பேஸ்மென்ட் போட்டிருக்கிறோம். 9 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டாலும் கட்டிடத்தில் சின்ன கீறல்கூட விழாது.இவ்வாறு கன்ஸ்ட்ரக்ஷன் அதிகாரிகள் கூறினர். சிறப்பாக திட்டமிட்டால் ஒரு வாரத்தில் 30, 40 மாடிகூட கட்ட முடியும் என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.

Like Us & Get More Updates....

https://www.facebook.com/TraditionalBuilder

Address

VPV Plaza, BHAVANI
Erode
638001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918248781094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traditional Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traditional Builders:

Share

Category