04/10/2019
ஆடு மாடு கோழி பண்றி கழிவுகளை பயன்படுத்தி பயோ-கேஸ் தயாரிக்க முடியும்
400 பண்றி கழிவுகளிலிருந்து நாள் ஒன்றுக்கு 10 கிலோ கேஸ் பெரும் முறையை தொடங்கி எங்கள் நிறுவனம் (SMT Construction)சார்பாக கட்டுமானம் நடந்து முடிந்து பயன் பாட்டுக்கு வந்துவிட்டது
துர்நாற்றம் முழுமையாக கட்டுபடுத்தபட்டது
தினமும் 10 கிலோ அளவு எரிவாயு பெற படுகிறது.
தண்ணீர் திணமும் 2000 லிட்டர் மட்டுமே பயன் பாட்டுக்கு தேவைபடுகிறது.. கடந்த காலங்களில் தினமும் 10000 லிட்டர் தேவைபட்டது.
இதில் பெறப படும் கழிவுகள் நீரில் 5:1 என்ற சதவீதத்தில் கலந்து உரமாக பயன்படுத்தபடுகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்று மாட்டு சாணத்தில் இருந்து தினம் தினம் நாம் கேஸ் பெற்று வந்தோம்.
தமிழ்நாட்டில் உணவு பொருட்கள், மனித கழிவுகள் ,பண்றிக் கழிவுகளை பயன் படுத்தி பயோ-கேஸ் தயாரிக்கும் முறை பிரபல மாகவில்லை. மாட்டுச் சாணத்தை வைத்துத் தயாரிப்பதைக் காட்டிலும் பண்றிக் கழிவிலிருந்து அதிகளவு பயோ-கேஸ் உற்பத்தி செய்யமுடியும். இதில் அதிகளவு நைட்ரஜன் சத்து இருப்பதால் அதிகமாக மீத்தேன் வாயுவை வெளியிடும். இதன்மூலம் அதிகமான சக்தியைப் பெறலாம்.
தமிழகத்தில் வெள்ளை பன்றி வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் கோழி மாடு பன்றிகழிவுகளிலிருந்து பயோ -கேஸ் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.''
இவ்வாறு பெறப்படும் கேஸ் வாகனங்களுக்கு எரி பொருளாகவும் மின்சாரதயாரிப்பு மற்றும் சமயல் எரிவாயுவாக உணவு தயாரிப்பு பயன்படுத்தலாம் போன்ற முறைகளில் பயன் படுத்தலாம்.
அரசு மானியம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கு தோட்டகலை துறை மானியம் வழங்குகிறது.பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்தினால் சுற்றுசூழல் மாசு குறையும்