PGP Constructions

PGP Constructions We Build Your Dreams..

Electric sieving machine with 1hp motor for sale contact 9500344022
25/02/2023

Electric sieving machine with 1hp motor for sale contact 9500344022

1000 சதுர அடி வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்?இந்த கேள்வியை என்னிடம் கிட்டத்தட்ட பேருக்கு மேல் கேட்டிருப்பார்கள். சரி எல்ல...
31/08/2022

1000 சதுர அடி வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்?

இந்த கேள்வியை என்னிடம் கிட்டத்தட்ட பேருக்கு மேல் கேட்டிருப்பார்கள். சரி எல்லாருக்கும் சேந்தமாதிரி இப்போ விளக்கமான பதில் சொல்றேன்.

சதுர அடி மூலம் வீடு கட்ட ஆகும் மதிப்பை கணக்கிடுவது சரியான முறை கிடையாது.
மேலும் நீங்கள் 1000 சதுர அடியில் கட்டும் வீட்டில் அறைகள் எத்தனை தேவைப்படுகிறது?

அறையினுள் குளியல் மற்றும் கழிப்பிட வசதி அறைகள் எத்தனை?

வீட்டிற்கு எந்த தரத்திலான கட்டுமான பொருள்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

அது Load Bearing Structure அமைப்பில் கட்ட வேண்டுமா? RCC Structure அமைப்பில் கட்ட வேண்டுமா?

வருங்காலத்தில் மேலே வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா?

அவ்வாறு என்றால் எத்தனை தளம் கட்ட முடிவு செய்து இருக்கிறீர்கள்?

மண்ணின் தாங்கு திறன்(Soil Bearing Capacity)எவ்வாறு உள்ளது?

தரை மட்டத்திலிருந்து உங்கள் வீடு எத்தனை அடிக்கு உயர்த்த படவேண்டும்?

வீட்டின் முற்பகுதியில் Elevation டிசைன் தேவை படுமா?

வீட்டை சுற்றி சுவர் எடுக்க வேண்டுமா?

குடிநீர் தொட்டி, கழிவு நீர் தொட்டி போன்றவை அமைக்க வேண்டுமா?

இது போல பலவற்றை ஆராய்ந்து தான் வீட்டின் கட்டுமானத்திற்கு ஆகும் செலவை கணக்கிட முடியும்.
வெறுமனே சதுர அடிக்கு இவ்வளவு செலவு ஆகும் என்று மட்டும் கணக்கிட்டு வீடுகட்ட துவங்கினால் நிச்சயம் உங்களால் செலவுகளை கட்டுப்படுத்த இயலாது. உங்கள் தேவை மற்றும் வசதிகள் என்ன என்ன என்பதை முதலில் திட்டமிடுங்கள். பின்னர் அதற்கு ஏற்ப ஒரு பொறியாளரை சந்தித்து உங்கள் வீட்டிற்கான பிளான் மற்றும் Estimation வாங்கி கொள்ளுங்கள்.
அந்த குறிப்பிட்ட தொகையிலிருந்து ஒரு 10 சதவிகிதம் கூடுதலாக பணத்தை தயார் செய்துவிட்டு கட்டுமான வேலைகளை தொடங்குங்கள் .முடிந்தவரை விரைவாக 6 மாதங்களுக்குள்ளாகவே வீட்டை கட்டிமுடிக்க பாருங்கள் . அப்பொழுது தன் விலைவாசி ஏற்றம் உங்கள் படஜெட்டை அதிக அளவில் பாதிக்காமல் இருக்கும் .

வீட்டில் ஏசி வாங்கி மாட்டுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?வீட்டில் AC வாங்கி மாட்டுவதற்கு முன்னால் நாம் மிக ம...
27/08/2022

வீட்டில் ஏசி வாங்கி மாட்டுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

வீட்டில் AC வாங்கி மாட்டுவதற்கு முன்னால் நாம் மிக முக்கியமாக யோசிக்கவேண்டியது ,நமக்கு AC கண்டிப்பாக தேவைதானா? என்பது தான்..

நடுத்தர பொருளாதார வர்க்கத்தில் இருக்கும்பட்சத்தில்... சராசரியாக 15 முதல் 25 சதவிகிதம் மின்கட்டணம் AC பயன்படுத்துவதால் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.இது கோடைகாலம் மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்ப கூடவோ அல்லது குறையவோ செய்யலாம். மேலும் ஒவ்வரு தனி நபரின் பயன்பாட்டுக்கு ஏற்ப மின்கட்டணங்களில் மாற்றங்கள் இருக்கலாம் .

சரி இப்போது கட்டுமானம் சம்பந்தமாக AC வாங்கும்போது நாம் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்களை பார்க்கலாம்.

Room Size :

இதுதான் வாங்கும்போது நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம். நீங்கள் AC மாட்டவிருக்கும் அறையின் நீளம் ,அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றை பெருக்கி அறையின் கொள்ளளவை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும்.அதற்கு ஏற்ப AC இன் டன் அளவை விற்பனையாளரிடம் நன்கு விசாரித்து வாங்குவது நல்லது. பெரிய அறைக்கு குறைந்த டன் அளவுள்ள குளிரூட்டியை பயன்படுத்தும்போது அதிக நேரம் AC இன் Compressor ஓடி அதிக மின்சாரத்தை பயன்படுத்தும். இதனால் மின்கட்டணம் அதிகமாக வரும் எனவே அறைகுதகுந்தாற்போல் AC டன் அளவுபார்த்து வாங்குவது முக்கியம்.

Things in Room :

பெரும்பாலும் குளிரூட்டியை நாம் படுக்கை அறையில்தான் பயன்படுத்துவோம். அங்கு பீரோ ,கட்டில் போன்ற இரும்பு சாமான்கள் அதிகம் இருக்கும் .அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த அறை குளிர்வடைவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். எனவே AC பயன்படுத்தும் அறையில் இரும்பு கட்டிலோ அலலது பீரோவோ வைப்பதை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக மரத்திலான கட்டில் பீரோ போன்றவற்றை பயன்படுத்தலாம் .மேலும் AC பயன்படுத்தும் அறைகளில் வெளியில் இருந்து நேரடியாக சூரிய கதிர்கள் படாதவாறு ஜன்னல்களை அமைக்கவேண்டும் .ஜன்னல் கதவுகளுக்கு Screen போடுவதும் நல்லது.

இது போன்ற சில சின்ன சின்ன விஷயங்களை நாம் கவனத்தில் வைத்து வீட்டிற்கு வாங்கினால் அது அனைவர்க்கும் பயனளிக்கும் .

இது போன்ற கட்டுமானத்துறை சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களை படித்து தெரிந்துகொள்ள , Facebookஇல் உள்ள எங்கள் குழுவில் இணையுங்கள்.

உங்களது ஒவ்வரு சந்தேகங்களுக்கும் ..என் போன்ற பல பொறியாளர்களின் பதில்களையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம் …

நன்றி

வணக்கம்

போர் மூலம் ஆரம்பத்தில் ஒரு வருடம் தண்ணீர் சுத்தமாக வந்தது. இப்போது மிகவும் கலங்கலாக வருகிறது. அது ஏன்?நிலத்தடி நீரில் வே...
24/08/2022

போர் மூலம் ஆரம்பத்தில் ஒரு வருடம் தண்ணீர் சுத்தமாக வந்தது. இப்போது மிகவும் கலங்கலாக வருகிறது. அது ஏன்?

நிலத்தடி நீரில் வேறுபாடு வருவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளது.

1) Source Recharge Pointஇல் ஏற்படும் மாற்றங்கள்
2) நமது போர் அருகில் செய்யும் தவறுகள்

Source Reharge Point :

பொதுவாக நிலத்தடி நீர் என்பது ,எங்கோ ஒரு இடத்தில பூமிக்கு அடியில் செல்லும் நீரானது மண் அடுக்குகளால் வடிகட்டப்பட்டு Aquifer எனப்படும் பாறை அடுக்குகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் நிலத்தடி நீராக சேர்கின்றது. இதைத்தான் போர் மூலம் நாம் எடுத்து நிலத்தடி நீராக பயன்படுத்துகிறோம் .இதில் இந்த Aquiferக்கு நீர் செல்லும் Recharge Point எனப்படும் இடத்தில உள்ள மண் அடுக்குகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது பூமிக்கு அடியில் உள்ள பாறை அடுக்குகளில் ஏதேனும் நகர்வுகள் உண்டானாலோ நிலத்தடி நீரின் தன்மையில் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.

உதாரணத்திற்கு தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபொழுது கடற்கரையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்கள் ஊரின் பொது அடிபம்பின் தண்ணீரில் மாற்றம் ஏற்பட்டு மிகவும் உப்பாக கடல்தண்ணீர் போல மாறியது

இது இயற்கையாக நடைபெறும் மாற்றங்கள் தான் .இதை தடுக்க நாம் ஒன்றும் செய்யமுடியாது .ஆனால் கொஞ்சம் காலம் கடந்தபின்னர் அதுவாகவே சரியாகிவிடும். எங்கள் ஊரிலும் அப்டித்தான் கிட்டத்தட்ட ஆண்டுகள் கழித்தபின்புதான் தண்ணீரில் உப்புத்தன்மை குறைந்தது.

நமது போர் அருகில் செய்யும் தவறுகள் :

இது முற்றிலும் நாமோ அல்லது நம்மை சுற்றிலும் உள்ள சிலர் செய்யும் தவறுகளினால் ஏற்படுவது ஆகும் . மழைக்காலங்களில் மழைநீரை சேமிக்கிறேன் என்று சிலபேர் அப்படியே மழைநீரை பூமிக்குள் போர் மூலம் செலுத்துவதை பார்த்திருப்போம் . அப்படி செலுத்துவதால் கண்டிப்பாக நிலத்தடிநீரின் தன்மை நிச்சியமாக மாறுபடும்.இன்னும் சிலர் வடிகட்டி அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் மழைத்தண்ணீரை நேரடியாக கிணற்றுக்குள் விடுவார்கள். அதுவும் கூட நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணம் தான்.

விவசாய பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்கும் கிணற்றில்வேண்டுமானால் இப்படி மழைநீரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ஆனால் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணறுகளில் இவ்வாறு செய்வது நிச்சயம் கேள்விக்குரியதே. வடிகட்டி அமைப்புகள் மூலம் Suspended and collaidal Particles மட்டும் தன் சுத்தம் செய்ய இயலும் .சரி அப்றம் எப்படித்தான் மழைநீரை சேமிப்பது என்று உங்களுக்கு கேள்விகள் வரலாம்.

மழைநீரை அதன் போக்கிலேயே அறுகளிலோ அல்லது குளம் ,கண்மாய் போன்றவற்றிலோ சேமிப்பதுதான் மிக சிறந்த வழி

அல்லது உங்கள் வீட்டின் அருகில் Rainwater harvesting Pit குழி எடுத்து அமைத்து அதில் மூலமாக சேமிக்கலாம். ஏரிகளில் மற்றும் கண்மாய்களில் Rainwater சேமிக்கும் போது அங்கு பல்வேறு Aquiferன் Recharge points இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் .மேலும் அங்குள்ள வண்டல் மற்றும் மணல் படிவங்கள் வழியே தண்ணீர் ஊடுருவி பூமிக்குள் செல்லும்போது பெரும்பாலான அசுத்தங்கள் நீங்கி சுத்தமான நிலத்தடிநீராக Aquiferஐ சென்றடையும்.

நன்றி

நான்கு பேர் வசிக்கும் குடும்பத்திற்கு எத்தனை சதுர அடியில் வீடு கட்டுவது சிறந்தது?எத்தனை சதுர அடியில் வீடு கட்டவேண்டும் எ...
20/08/2022

நான்கு பேர் வசிக்கும் குடும்பத்திற்கு எத்தனை சதுர அடியில் வீடு கட்டுவது சிறந்தது?

எத்தனை சதுர அடியில் வீடு கட்டவேண்டும் என்பது உங்கள் நால்வரின் தேவையையும் நிதி நிலைமையையும் பொறுத்ததுதான்.

நீங்கள் சொல்லும் நான்குபேர் என்ற கருத்தில் பெற்றோர் இருவர் மற்றும் 2 குழந்தைகள் என்று வைத்துக்கொண்டால் ,குறைந்தது 700 சதுர அடியில் இருந்து 900 சதுர அடி வரை உள்ள வீடு போதுமானது . இதில் 2 படுக்கை அறை ,1 கழிப்பறை சமையலறை மற்றும் ஒரு ஹால் கொண்ட போதிய அளவுள்ள வீட்டை அமைக்கலாம்.

இதுவே குழந்தைகள் இருவரும் திருமணம் செய்யும் வயதில் இருந்தால் கண்டிப்பாக 900 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவது நல்லது . ஏனெனில் ஒரு குழந்தைக்கு ஒரு படுக்கை அறை என்ற விகிதத்தில் 2 படுக்கை அறையும் , பெரியவர்கள் படுக்கும் வகையில் ஒரு அறையும் சேர்த்து கட்டுவது மிகவும் அவசியம்.

ஒருவேளை இப்பொழுது தான் உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள் அவர்கள் திருமண வயதுவர இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்னும் பட்சத்தில் நான் முதலில் சொன்ன ஐடியா வை எடுத்துக்கொள்ளலாம் . அப்றம் கொஞ்சம் நாள் கழித்தபின்னர் மாடியில் தனியாக ஒரு படுக்கை அறை அமைத்துக்கொண்டால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் .

மேல் சொன்ன கருத்துக்கள் அனைத்துமே உங்கள் தனிப்பட்ட நிதிநிலைமைக்கும், தேவை அளவீட்டிற்கும் பொறுத்து மாறுபாடு உடையவை .எனவே ஒரு நல்ல நிதிஆலோசகரையோ அல்லது பொறியாளரையோ நேரில் சந்தித்து ஆலோசனை செய்தபின்னர் முடிவுகள் எடுப்பது உசிதம்.

புதிய கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட காரணம் ? என்ன அதை எப்படி தவிர்க்கலாம் ?வெடிப்புகள் என்பது கட்டிடங்கள் அனைத்திலுமே ப...
17/08/2022

புதிய கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட காரணம் ? என்ன அதை எப்படி தவிர்க்கலாம் ?

வெடிப்புகள் என்பது கட்டிடங்கள் அனைத்திலுமே பொதுவா ஏற்பட கூடிய பிரச்சனைகளில் ஒன்றுதான் .கட்டிடங்களில் ஏற்படும் வெடிப்புகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எளிதில் சரிசெய்யக்கூடியதாகவே தன் இருக்கும் .

கட்டிட வெடிப்புகளை பொறுத்த வரை அவற்றை நாம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சரிசெய்வது மிகவும் முக்கியம் . காலம் தாழ்த்தும்பட்சத்தில் வெடிப்புகளோடு ஈரப்பதம் மற்றும் ஓதம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
எனவே கட்டிடத்தில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்று சில விஷயங்களை பார்க்கலாம்.

Air Cracks : இது புதிதாக கட்டிய அணைத்து கட்டிடங்களிலும் ஏற்பட கூட ஒன்றுதான் இதை கண்டு நாம் அஞ்சத்தேவையில்லை .பூச்சு வேலை முடிந்த உடன் கொஞ்சம் சுண்ணாம்பு அல்லது White Cement கொண்டு வெள்ளையடித்து விட்டாலே இதை வெடிப்புகள் மறைந்துவிடும். இதனால் கட்டிடத்தின் வலிமைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

Proper Curing : பெரும்பாலான கட்டிடங்களில் வெடிப்பு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் சரியான Curing இல்லாதது தான் .எனவே கட்டிடம் கட்டும்போதே தினமும் நல்ல தண்ணீர் விட்டு நனைக்கவேண்டியது மிகவும் அவசியம் .அதிலும் குறிப்பாக உப்பு தண்ணீரை பயன்படுத்தவே கூடாது .கட்டுமானத்தின்போதோ அல்லது நனைக்கும்போதோ உப்பு தண்ணீரை பயன்படுத்தினால் Effloroscence என்ற உப்புப்படிதல் பிரச்சனை ஏற்படும் . எனவே வீடுகட்டும்போதே நன்றாக தண்ணீர்விட்டு நனைத்துவிடுவது வெடிப்புகள் வருவதை தடுக்கும்.

Improper Design : சிலநேரங்களில் வீட்டின் வடிவமைப்பில் ஏற்படும் தவறுகளினால்கூட புதிய வீட்டில் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு .வீட்டின் Live load மற்றும் Dead Load ஆகியவற்றை சரியாக கணக்கிடக்காமல் கம்பிகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்திலும் கூட கட்டிடத்தில் வெடிப்புகள் வரலாம் . இந்த வகை தவறுகள் பெரும்பாலும் மேஸ்திரிகளை கொண்டு கட்டப்படும் கட்டிடங்களிலேயே காணப்படும். இந்தவகை வெடிப்புகள் கட்டிடத்தின் வலிமைக்கும் ,ஆயுளுக்கும் பாதகம் விளைவிக்கும் . எனவே இந்த வகை வெடிப்புகளை தக்க நேரத்தில் கண்டுபிடித்து சரிசெய்வது உங்களுக்கும் ,உங்கள் வீட்டின் ஆயுளுக்கும் நல்லது.

இது போன்ற கட்டிடங்கள் பற்றிய மேலும் தகவல்களை தொடர்ந்து படிக்க எங்களது Facebook Group இல் இணையுங்கள் …

உங்களது கேள்விகளுக்கு என்போன்ற பல பொறியாளர்களின் கருத்துக்களையும் படித்து தெரிந்துகொள்ளலாம் …

நன்றி

வணக்கம்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ...
15/08/2022

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ...

செங்கல் சுவர் கட்டிய பின்பு குறைந்தது எத்தனை நாட்கள் தண்ணீர் விட்டு நனைக்க வேண்டும் ?எந்த ஒரு கட்டுமானத்தின் போதும் அதில...
13/08/2022

செங்கல் சுவர் கட்டிய பின்பு குறைந்தது எத்தனை நாட்கள் தண்ணீர் விட்டு நனைக்க வேண்டும் ?

எந்த ஒரு கட்டுமானத்தின் போதும் அதில் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டிருந்தால், நிச்சயம் அந்த கட்டுமானத்தை குறிப்பிட்ட காலத்திற்கு Curing செய்யவேண்டும்.

Curing என்பது சாதாரணமாக கட்டுமானத்திற்கு நாம் தண்ணீர் விட்டு நனைக்கும் நடைமுறை தான். ஆனால் அதில் எந்த வகையான வேலைப்பாடுகளுக்கு எவ்வளவு நாள் நனைக்க வேண்டுமென்று சில வழிமுறைகள் இருக்கின்றன .

சரி இப்போது கட்டிடத்தை Curing செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

1 ) கட்டுமானத்தின் வலிமையை அதிகரிக்கின்றது

2 ) கட்டிடத்தின் ஆயுளை நீட்டிக்கின்றது
கட்டிடத்தில் ஏற்படும் விரிசல்களை குறைக்கின்றது

3)கட்டிடத்தில் Shriknage வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கின்றது

எப்பொழுது Curing செய்ய தொடங்கவேண்டும் ?

1 ) செங்கல் கட்டுமானத்தின்போது வேலைமுடிந்தபின்னர் குறைந்தது 12 மணிநேரத்திற்கு பின்புதான் தண்ணீர்விட்டு நனைக்க வேண்டும். ஏனனில் சிமெண்ட் அதன் அதிகபட்ச Setting time 10 மணிநேரம் ஆகும் . எனவே அதன் Setting time முடிந்த பின்பு தன் நான் தண்ணீர் விட்டு நனைக்க வேண்டும்.

2 ) பூச்சு வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தால் வேலை முடிந்த 24 மணிநேரத்திற்கு பின்பாகவே நனைக்க தொடக்க வேண்டும். அதற்கு முன்பே தண்ணீர் ஊற்றினால் மேற்பரப்பு சரியாக வராது, சற்று சொறசொற என்று இருக்கும்.

எத்தனை நாட்கள் Curing செய்ய வேண்டும் ?

Curing Period என்பது நாம் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் Mortarஇன் தரத்தை பொறுத்து மாறுபடும் .இந்திய நடைமுறையில் குறைந்தது 7 நாட்களாவது செங்கல் கட்டுமானங்களை நனைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சிமெண்ட் அதிகம் கொண்ட வலிமையான கலவையை பயன்படுத்தியிருந்தால் 10 நாட்கள் வரை நனைக்க வேண்டும் .

பூச்சு வேலையின் போது குறைந்தது 7 நாட்களில் இருந்து உங்களது விருப்பதிற்கிஏற்ப 15 நாட்கள் வரையும் தண்ணீர் நனைக்கலாம். நல்ல முறையில் தண்ணீர் நனைக்கும் போது கட்டிடத்தில் ஏற்படும் விரிசல்கள் குறையும்

இது போன்ற கட்டிடங்கள் பற்றிய மேலும் தகவல்களை தொடர்ந்து படிக்க எங்களது Facebook Group இல் இணையுங்கள் …

உங்களது கேள்விகளுக்கு என்போன்ற பல பொறியாளர்களின் கருத்துக்களையும் படித்து தெரிந்துகொள்ளலாம் …

நன்றி

வணக்கம்

ஒரு கட்டிடத்தின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு ஆண்டுகள்?ஒரு கட்டிடத்தின் ஆயுள் என்பது அந்த வீட்டை கட்டும்போது பயன்படுத்தப்பட...
10/08/2022

ஒரு கட்டிடத்தின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு ஆண்டுகள்?

ஒரு கட்டிடத்தின் ஆயுள் என்பது அந்த வீட்டை கட்டும்போது பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் மற்றும் கட்டிமுடித்த பின்பு அதனை பராமரிக்கும் நபரின் செயல்பாடுகளை பொறுத்து பெரிதும் மாறுபடும் .

நல்ல Reinforcement கொண்டு, உள்ளும் வெளியேயும் நன்கு பிளாஸ்டர் செய்யப்பட்ட, நல்ல பவுண்டேசன் உடன் கட்டப்பட்ட கட்டிடம், 40ல் இருந்து 60 வருடங்கள் வரை தாக்குபிடிக்கும்.

சிறிய அளவில் கட்டிடம் கட்டி விற்பவர்களிடம் விலை குறைவாக பேசி வீடுகட்டி வாங்கும் பொழுது , ஆயுள்சற்று குறைவாக வரும் சாத்தியம் உண்டு. ஏனேனில் வியாபார முறையில் வீடுகட்டி விற்பனை செய்யும் பலர் தரம் குறைவான பொருட்களையே பயன்படுத்தி வீட்டை கட்டுகின்றனர் . விற்பனை செய்யும்போது மட்டும் கண்ணுக்கு கவர்ச்சியாக மாடுலர் கிச்சன் மற்றும் பல வண்ண பெயிண்ட் அடித்து மேக்கப் போட்டுவிடுகின்றனர். நம்மவர்களுக்கும் இப்படி மேக்கப் செய்யப்பட்ட வீடுகள்தான் பிடிக்கின்றது.எனவே வீடு வாங்கும்போது உஷாராக இருப்பது உங்கள் பர்ஸுக்கு நல்லது.

30–40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள் நன்கு பராமரித்து வந்தோமானால், சுமாராக 70 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கும்.

30–40 வருடங்களில் பேஸன் மாறிவிட்டு இருக்கும். அப்புறம் கட்டிடம் நன்றாக இருந்தாலும், நமக்கு ஏற்றவாறு Alteration செய்வதும் காஸ்ட்டிலியாக இருக்கும் பட்சத்தில், அப்பொழுது இடித்துவிட்டு புதிதாக கட்டவேண்டியும் வரும்.

எனவே 40 முதல் 50 ஆண்டுகளுக்கு பிறகு.. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிய டிசைனில் வீடு கட்டிக்கொள்வது என்னைப்பொறுத்தவரை சிறந்த சாய்ஸ் 😍..

நண்பன் ஒருவன் வந்த பிறகு..விண்ணை தொடலாம் உந்தன் சிறகு..வாணுக்கும் எல்லை உண்டுநட்புக்கில்லையே..அனைவருக்கும் இனிய நண்பர்கள...
07/08/2022

நண்பன் ஒருவன் வந்த பிறகு..
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு..

வாணுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே..

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் 😍😍

அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவது, தூண்கள் எழுப்பி வீடு கட்டுவது ஆகிய முறைகளில் உள்ள நிறைகுறைகள் என்ன? எந்த முறை சிறந்தது?...
06/08/2022

அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவது, தூண்கள் எழுப்பி வீடு கட்டுவது ஆகிய முறைகளில் உள்ள நிறைகுறைகள் என்ன? எந்த முறை சிறந்தது?

அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவது,இதை சரியாக சொல்லனும்னா Load bearing structure என்று ஆங்கிலத்திலும், தமிழில் தாய்சுவர் முறை என்று சொல்லலாம்.

இந்த (Load bearing structure)தாய்சுவர் முறையில் மொத்த எடையானது(DL+LL+WL) சுவரின் வழியாக தரையை(Ground) சென்றடையும்.

இதன் நிறைகள்:

1) இதில் கற்களை(செங்கல்(அ)மற்ற வகையான கற்கள்) மட்டும் பயன்படுத்தி சுவர் எழுப்பி வீடு கட்டபடுவதால், column(தூண்) தேவை இல்லாததால்,அதற்கு பயன்படுத்தபடும் கான்கிரீட்,கம்பிகள்( reinforcement details) தேவை இல்லாததால் வீட்டின் செலவு குறையும்.

2) இந்த முறையில் வீடு கட்டும்போது framed structure ஐ விட குறைவான நேரத்தில் வீடு கட்டிமுடிக்க முடியும்.

3) இது மிகவும் பழமையான மற்றும் எளிமையான வீடு கட்டும்முறை.குறைந்த அளவிலான உபகரணங்கள்(construction tools) போதுமானது.

குறைகள்:

1) இதில் சுவர் மூலம் மொத்த எடை தரைக்கு செல்வதால், கீழ்தளத்தில் எந்த இடத்தில் சுவர் இருக்கிறதோ மேல்தளத்திலும் அதே இடத்தில் சுவர் எழுப்பப்பட வேண்டும்.சுவரை(அறையை) மாற்றி அமைக்க இயலாது.

2) இந்த முறையில் அதிகபட்சம் (G+2) இரண்டு மேல்தளங்கள் வரை மட்டுமே அமைக்க முடியும்.

3) Shallow foundation: கடினமான மண்(hard strata) நான்கு அடிக்குள் இருக்கும் இடத்தில் மட்டுமே இந்த முறையில் வீடு கட்டுவது சாத்தியமாகும்.

4) வீட்டின் அனைத்து சுவர்களுமே 9"(இன்ச்) தடிமன் உள்ளதாக அமைக்க வேண்டும்.framed structure-ல் உள்ளது போல் வீட்டின் உட்பகுதியில் உள்ள சுவர்களை 4.5"(இன்ச்) க்கு அமைக்க முடியாது.எனவே வீட்டின் அறையின் அளவு(floor area (or)room area) சிறிது குறையும்.

Framed structure(column மற்றும் beam வைத்து கட்டுவது).இதில் மொத்த எடையானது(DL+LL+WL) slab - beam — column வழியாக தரையை சென்றடையும்.

நிறைகள்:

1) இந்த நவீன முறையில் தான் அனைத்து வானுயர் கட்டடங்களும் கட்டப்படுகிறது. எத்தனை மேல்தளங்கள் வேண்டுமானாலும் இம்முறையில் கட்டிக்கொள்ள முடியும்.

2) கீழ்தளத்தில் உள்ள வீட்டின் அமைப்பை அப்படியே மேல்தளத்திற்கு மாற்ற தேவையில்லை.ஒவ்வொரு தளத்தின் அமைப்பையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

3) எந்த வகையான மண் உள்ள இடத்திலும் இம்முறையில் வீடு கட்டிக் கொள்ளலாம்.

Load bearing structure உடன் ஒப்பிடும்போது இதில் எந்த குறையும் இல்லை என்பதே என்னுடைய கருத்து.

இந்த இரண்டில் எந்த முறை சிறந்தது ?… எதை தேர்ந்தெடுப்பது?…

நீங்கள் வீடு கட்ட போகும் இடத்தில் கடினமான மண்(hard strata) நான்கு அடிக்குள் கிடைக்கிறது மற்றும் நான் ஒரு 1500 சதுரஅடிக்குள் வீடு கட்டப்போகிறேன் மற்றும் இரண்டு மேல்தளத்திற்கு(G+2)மேல் தேவையில்லை என்றால் நீங்கள் தாராளமாக Load bearing structure (தாய் சுவர் முறை) ஐ தேர்ந்தெடுக்கலாம்.இதற்கு framed structure ஐ விட குறைவான செலவே ஆகும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

Question : காண்ட்ராக்ட் முறையில் வீடுகட்ட சதுரடி 2000 ரூபாய் என்று சொல்கிறார்கள். ஆனால் வீடு கட்ட தேவைப்படும் மூலப்பொருட...
03/08/2022

Question : காண்ட்ராக்ட் முறையில் வீடுகட்ட சதுரடி 2000 ரூபாய் என்று சொல்கிறார்கள். ஆனால் வீடு கட்ட தேவைப்படும் மூலப்பொருட்களான, மணல், சிமெண்ட், பிற பொருட்கள், மற்றும் ஆள் கூலி போன்றவைகளை சேர்த்தாலும் 2000 ரூபாயை விட குறைவாகதானே வருகிறது. இது சரியா?

Answer : நண்பரின் பீரோ கடையில் இருந்தேன். ஒரு வாடிக்கையாளர் கேட்டார், பீரோ எவ்வளவு விலை. எத்தனை கிலோ என்று. பிறகு இரும்பு இவ்வளவு ரூபாய் தானே 20 கிலோ பீரோ ஏன் இவ்வளவு விலை என்று. அதற்காக 20 கிலோ இரும்பு வாங்கி அதில் உடைகள் வைக்க முடியுமா? அது போல தான் இதுவும். நீங்கள் பொருட்கள் விலை மட்டும் பார்க்கிறீர்கள். அதற்கு செய் கூலி சேதாரம் உண்டு.

வீடு கட்டுவதற்கு முன்பு பல காண்ட்ராக்டர்களை கலந்து பேசுங்கள். ப்ளைவுட் கதவு என்றால் ஒரு ரேட், தேக்கு கதவு என்றால் வேறு ரேட், இது போலவே பெயிண்ட், இரும்பு, டைல்ஸ், இண்டீரியர், சிமெண்ட் டேங்க் அல்லது சின்டெக்ஸ் டேங்க், அண்டர் க்ரௌண்ட் செப்டிக் டேங்க், நல்ல தண்ணீர் டேங்க், உப்பு தண்ணீர் டேங்க்கள் அதனுடைய அளவுகள், வீட்டை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் உயரம், ஜாகுவார் பைப் பிட்டிங் அல்லது பிளாஸ்டிக் பைப் பிட்டிங், ஜன்னலுக்கு அலுமினியம் கதவு அல்லது மரக்கதவு, கரண்ட் அவர்கள் செலவில் எடுத்துத் தருவது, கட்டும் முன்பே ப்ளான் அப்ரூவல் பெறுவது இப்படி நீண்ட லிஸ்ட் உண்டு.

இதில் எதுவெல்லாம் அந்த காண்ட்ராக்டில் வருகிறது என்று தெளிவாக பேசி எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒன்றோ அல்லது இரண்டு வீடுகள் தான் கட்டப்போகிறீர்கள். அதை நல்ல முறையில் தரமான கட்டிட பொறியாளரை வைத்து கட்டுவதே சிறந்தது .

விலை குறைவாக இருக்கிறது என்று அரைகுறை மேஸ்திரிகளிடம் சிக்கிவிடாதீர்கள்.. அப்றம் தலையில் போடுவதற்கு துண்டு கூட மிஞ்சாது... கவனம் 🤣🤣🤣

Address

Rajapalayam

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when PGP Constructions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PGP Constructions:

Share