Writer Charithraa's

Writer Charithraa's A Writer. An Architect. A Musicophile. Multitarian but a Lucubrate.!
(1)

திடீரென்று Feed -ல் தோன்றி, "எவ்வளவு ரசித்து வாசித்திருக்கிறார்கள் பார்.." என்று தலையில் கொட்டிவிட்டுச்சென்றது இந்த பதிவ...
25/08/2026

திடீரென்று Feed -ல் தோன்றி, "எவ்வளவு ரசித்து வாசித்திருக்கிறார்கள் பார்.." என்று தலையில் கொட்டிவிட்டுச்சென்றது இந்த பதிவுகள். இப்போதும் இருக்கிறார்கள், அதையே செய்துகொண்டு. முன்பைவிட அதிகமாய்.

இருப்பினும் அதைவிடவும் அதிகமாய்ச் செய்யவேண்டியது,

"இந்த Group-இல் எல்லோரும் தங்கள் எழுத்துகளை, கருத்துகளை, கேள்விகளை, பதில்களை, புதிய தேடல்களை, பகிரும் தளமாக பயன்படுத்திக்கொள்வதே.!"

Inbox-ல் வரும் கேள்விகள், சந்தேகங்கள், அ.குழப்பங்கள், கா.சிந்தனைகளை Group-ல் நீங்கள் Anonymous -ஆகவே கேட்கலாம்.

Fans of Charithraa's
https://www.facebook.com/groups/123944059571202
--------------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

கேஸ் போட்டவருக்கு நிச்சயம் வாழ்த்துகளும் ஆதரவும் கொடுத்தே ஆகவேண்டும். அவிழ்த்துப்போட்டுத் திரிந்த இந்த Pussies-க்கு (பூன...
24/08/2026

கேஸ் போட்டவருக்கு நிச்சயம் வாழ்த்துகளும் ஆதரவும் கொடுத்தே ஆகவேண்டும். அவிழ்த்துப்போட்டுத் திரிந்த இந்த Pussies-க்கு (பூனை, பூனை!) முதல் மணி கட்டியிருக்கிறார். சராசரி வர்க்கத்தின் உழைத்த காசு கஞ்சா, போதை, மது இதிலெல்லாம் கெட்டொழிந்தது போல, "பெண்சுகம்" என்ற போதையை வைத்து Subscription என்ற பெயரில் மட்டும் சிலபல கோடிகள் கெட்டொழிந்து போய்க்கொண்டிருக்கிறது இதுகளால்.

ஆனால் ஒரேயொரு சிக்கல்-

ஒருவேளை சிறைசெல்ல நேர்ந்தால், அங்கிருக்கும் ரோஷக்கார பெண்கைதிகளை கெடுக்க நேரிடும். அபராதம் கட்ட நேர்ந்தால், "ஃபைன் கட்டணும் அவ்வளவுதானே..? ஃபைன்.! ஒரு ராத்திரி எக்ஸ்ட்ரா டூட்டி பார்த்தா போச்சு..!" என்று அடுத்தகட்டம் போவார்கள்.

இப்போதைக்கு இருபது பேர். இன்னும் இருநூறு பேர் இருக்கிறார்கள். இரண்டாயிரம் பேர் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லாரையும் ஒரே செல்லில் ஒரு இரண்டு வருடம் அடைத்து வைத்து, மொபைல் போன் இன்டர்நெட் இன்ஸ்டாகிராம் எதுவுமே இல்லாதபடிக்கு செய்யவேண்டும்.

வெளியே வரும்போது வெறி பிடித்த (ஜோ)ம்பீஸ் ஆகியிருப்பர்.

அப்புறம்,

இந்த Instagram Couples கூட்டத்துக்குத்தான் ஒரு கேடு வரமாட்டேன் என்கிறது.!
----------------------------
கொசுறு:
"இந்த மாதிரி எல்லாம் வீடியோ போடாதம்மா..அப்பா சொல்றேன்ல..?" என்று அப்பா சொன்னதற்காக ஆபாச வீடியோக்கள் தவிர்த்து சமையல் வீடியோக்கள் (கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும்) போடும் 'டிக்டாக் இலக்கியா இதிலிருந்து கிரேட் எஸ்கேப்.!!

அப்பாவின் அறிவுறுத்தல் காப்பாற்றிவிட்டது போலும்.

சும்மாவா சொன்னார்கள்?

"தந்தைசொல் மிக்க மந்திரமில்லை"
-------------------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

சமீபத்தில் OTT-யில் வெளியான தமிழ் வெப்சீரிஸ் ஒன்றில் பள்ளி மாணவிகளின் லெஸ்பியன் உறவை அப்பட்டமாய்....அதுபற்றி கடைசிவரியில...
24/08/2026

சமீபத்தில் OTT-யில் வெளியான தமிழ் வெப்சீரிஸ் ஒன்றில் பள்ளி மாணவிகளின் லெஸ்பியன் உறவை அப்பட்டமாய்....

அதுபற்றி கடைசிவரியில் பார்க்கலாம். அதற்குமுன் இந்தச்செய்தியை பார்த்துவிடுவோம்.

திரைப்படங்களை வெளியிடாவிட்டால், தியேட்டர்களை இழுத்து மூடிவிட்டால், பால்விலை குறையப்போவதில்லை. மின்சாரத்தட்டுப்பாடு நிற்கப்போவதில்லை. பெய்யாமழை பெய்து பொய்க்கப்போவதில்லை. எல்நினோ சூடு இறங்கப்போவதில்லை. "எப்படியும் எவனும் தியேட்டருக்கு போகப்போறதில்ல...இதுல இவனுங்க வேற...!" என்று யோசிக்கும் சாமானியர்களுக்கு தம்படிக்கு பிரயோசனம் இல்லாத விஷயம் இது. கருணாஸ் மீம்ஸ் ஒன்று இருக்குமே, "சரிடா அதுக்கென்னா இப்ப..?" என்று நக்கலாகக் கடந்துவிடுவர்.

அது உழைத்துச் சாப்பிடும் வர்க்கம்.

ஆனாலிந்த இத்துப்போன சினிமாக்களை வைத்து அதைவிட இத்துப்போன Review /விமர்சனம்/பேட்டி/Gossips என்று வாயையும் மற்றொன்றையும் வாடகைக்கு விட்டுப் பிழைக்கும் சோஷியல் மீடியா, Youtube சேனல்களின் நிலையை நினைத்தால், சிவாஜி வில்லன் மீம்ஸ் ஒன்று இருக்குமே,

"அச்ச்சச்சோ...இப்புடி பண்ணிட்டாங்களே சிவாஜி...இனிமே சோத்துக்கு என்ன பண்ணுவீங்க..? நா வேணா நோகாம நோம்பு குடும்புடுற வேலை ஒன்னு சொல்லவா..? பிச்சை எடுத்து பொழச்சுக்கோங்க..!" நினைவுக்கு வருகிறது.

"அம்மா..தாயே..."என்று அதையும் இவர்கள் செய்வார்கள் அது வேறு விஷயம்.

ஏனெனில் இது ஓசியில் உண்டக்கட்டி வர்க்கம்.

இதில் அரசியல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

காரணம், ரெட் ஜெயின்ட்டை அடியோடு அழிப்பதற்கு. அப்படிப்பார்த்தால், முதல்வரின் மகன் ஜேசன் சஞ்சய்யின் "சிக்மா" படம் கூடத்தான் திரையிடப்படாமல் போகும்.

Politics have no Place here.

இரண்டே விடயம்தான் உறுத்தல்,
ஒன்று சினிமா தியேட்டர்களை இன்னமும் நம்பி பிழைத்துக்கொண்டிருக்கும் சிறுகுறு வியாபாரிகள் நிலைமை.
மற்றொன்று, சினிமாவோடு பிணைந்து வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் துணை நடிகர்கள், தொழிலாளர்கள், அவர்தம் குடும்பங்கள்.

இன்னொரு பெரு உறுத்தல், தியேட்டர்களில் ரிலீஸ் இல்லையென்றால் என்ன? நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று வீம்புக்கென்று பலர் இறங்குவர். அதில், சென்சார் தடையே இல்லாத வெப்சீரிஸ், 18+ படங்கள், யாவும் இன்னும் சௌகரியமாக வீட்டுக்குள் உள்நுழையும்.

சமீபத்தில் OTT-யில் வெளியான தமிழ் வெப்சீரிஸ் ஒன்றில் பள்ளி மாணவிகளின் லெஸ்பியன் உறவை அப்பட்டமாய்....

காண நேரிட்டதுபோல் இன்னும் பலவற்றை காண நேரிடும்.

நம் குழந்தைகளும்.
-----------------------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

அமைச்சரா இல்லையா என்ற விவாதமே வந்திருக்கக்கூடாது. ஏனெனில் இது யாராக இருந்தாலும் அவர்களது பெர்சனல் விஷயம். இருப்பினும் Ms...
23/08/2026

அமைச்சரா இல்லையா என்ற விவாதமே வந்திருக்கக்கூடாது. ஏனெனில் இது யாராக இருந்தாலும் அவர்களது பெர்சனல் விஷயம். இருப்பினும் Ms கீர்த்தனா சொன்ன அந்த இரண்டாவது பாயிண்ட் யோசிக்க வேண்டிய விஷயம்.

அந்தரங்கம், நடை, உடை, உடல்மொழி, அழகு இவற்றையெல்லாம் வைத்து அரசியல் நடப்பது தமிழகத்துக்கு புதிதல்ல. ஆனால் அவற்றை எதிர்கொண்டு தாக்குப்பிடிப்பதுதான் கடினம். குறிப்பாக பெண்கள். ஜெயலலிதா அதிரடியாகவும், தமிழிசை சௌந்தராஜன் மென்மையாகவும் இதை திறம்பட செய்தவர்கள். ஏனையோர் எல்லாம் சும்மா.

Anyhow இதுபோல் அநாகரீக Politics என்றொழியுமோ தெரியவில்லை.!

மாணவர் கொலை, மின்சாரத் தட்டுப்பாடு, வரி அதிகரிப்பு, தங்கமோதிர திட்டம் மலையாள வியாபாரிக்கு போனது என இப்படி அரசாங்கத்தை நோக்கி கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எவ்வளவோ உள்ளது. அதெல்லாம் கேட்டுதொலைத்துவிட்டால் வாயில் புண் வந்துவிடும் இந்த புண்ணாக்குகளுக்கு. வந்துவிட்டார்கள் ஒரு பெண்ணின் பின்புறத்தை வைத்து அலசி ஆராய்ந்து அரசியல் செய்ய.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.🤞
---------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

"ப்ப்ப்ப்ப்ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ் ஸ் ஸ் ஸ்..."   இதில் "ப்"கனடாவில் ஆரம்பித்து "ஸ்"கத்தாரில் முடியுமளவுக்கு அப...
22/08/2026

"ப்ப்ப்ப்ப்ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ் ஸ் ஸ் ஸ்..."

இதில் "ப்"கனடாவில் ஆரம்பித்து "ஸ்"கத்தாரில் முடியுமளவுக்கு அப்படி ஒரு கொ(கெ)ஞ்சலான இழுவை. ஆனாலும், அந்த கொஞ்சலான "ப்ளீஸ்" நிஜமாகவே இதயத்தை ப்ளீஸ் செய்து, இன்னும் கூட அந்தக்குரல் கேட்கலாம் போலிருந்தது.

"என்னாஆஆஆஆஆடா சொல்ற...?" என்று எஸ்.ஜே சூர்யா மாதிரி குழம்புவர்களுக்கு.....ப்ளீஸ், மன்னிக்கவும்.

அது கனடாவிலிருந்து வந்தவொரு Phone Call.

"ஹலோ.."

"எஸ்..."

"சரித்ரா பப்ளிகேஷனா?....."

"ஆ...ஆமா..."

"எனக்கு மேதகுவின் மகள் புத்தகம் கிடைக்குமா....? ப்ப்ப்ப்ப்ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ் ஸ் ஸ் ஸ்....?"

மீண்டும் அதே கெ(கொ)ஞ்சல்.

"Yes, கிடைக்கும்..எங்கே அனுப்ப வேண்டும்.? ஸ்ரீலங்கா..? இந்தியா..? இல்லேன்னா..."

"கனடாவுக்கு அனுப்பவும்...ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."

மீ.அ.கெ(கொ)ஞ்சல்.

"ஷ்யூர்..நோ இஷ்யூஸ்..!"

"பட் ஒரு சின்ன ரிக்வஸ்ட் ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."

மீ.அ.கெ(கொ).

"எஸ்..சொல்லுங்க..?"

"எனக்கு அந்த ரைட்டரோட ஆட்டோகிராஃபோட புக் வேணுமே...?"

"ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ் சொல்லலியே..?" என்று கேட்க நினைத்து, "இது பிஸினஸ்..இதில் விளையாடாதே..!" என்ற உள்மன எச்சரிப்பால், விட்டுவிட்டேன்.

"அது..அது...கொஞ்சம் கஷ்டமாச்சே..!" தடுமாறினேன். ஏனெனில் புத்தகம் என்கைவசம் எதுவுமே இல்லை கையெழுத்திட்டு அனுப்பிட.

"ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."

"அதானே பார்த்தேன்.!"என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே,

"இல்ல..கையில் புத்தகம் இல்ல...இருந்தா போட்டு அனுப்பிடலாம்..!"

"நீங்க பப்ளிஷர் தானே..?எனக்கு உங்க கையெழுத்து வேண்டாம்.! எனக்கு அவர் கையெழுத்துப்போட்டு வேணும்..!"

"அடிபொலி..! அப்போ இவ்வளவு நேரம் உன்னை publisher ன்னு நெனச்சுதான் பேசிருக்கா போல.....கிராதகி..!" மனக்குரங்கு எக்களித்தது.

"என்னை எதுவேணாலும் சொல்லு..ரீடர்ஸை எதுவும் சொல்லாதே..!" ம.குரங்கை எச்சரித்துவிட்டு அவளிடம்,

"முயற்சி பண்றேன்ங்க..ஆனா கொஞ்சம் நாள் ஆகும்...!"

"எவ்வளவு நாள்...?"

"சிலபல வாரங்கள் கூட ஆகலாம்..!"

"எவ்ளோ நாள் ஆனாலும் பரவால்ல..வெய்ட் பண்றேன்...பட் புத்தகம் ரைட்டர் ஆட்டோகிராஃபோட தான் வேணும்...ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."

அவளால் காத்திருக்க முடியும். பக்ஷே, ஞான் காத்திருக்க முடியாது. காரணம், புத்தகங்களை எவ்வளவு சீக்கிரம் அனுப்பமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்புவது சாலச்சிறந்தது. அதுவும் "மேதகுவின் மகள்" அனுப்புவதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வெளியே வந்திருக்கிறேன் வேறு.

யோசித்தேன். கூடவே அவளது அந்த இழுவையான ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ், கொஞ்சமாய் விளையாடத் தோண வைத்தது.

"அட ஏன்மா..புத்தகம் தான் முக்கியம். ரைட்டரா முக்கியம்..? கையெழுத்து நேரமாகும்..அதான் சொல்றேன். நீ உடனே வாங்கிடு.!"

"என்ன இப்படிச் சொல்றீங்க..?"

"அதுக்கில்ல....அவன் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லை...ஆட்டோகிராஃப் எல்லாம் போட்டுத்தர...யார் எழுதினா என்ன..? வாசிக்கறது தானே முக்கியம். அதுக்காக சொன்னேன்.!"

ஒரு இரண்டு நொடி அமைதியான Pause. பேச்சே இல்லை.

மௌனம் சம்மதம் என்று அசட்டையாய் எடுத்துக்கொண்டு "எப்போ வேணும்..?" என்று நான் கேட்டு முடிப்பதற்குள்,

பெருவெடியாய் வெடித்தாள்.!!!!

"காமன் சென்ஸ் இல்ல...? நீங்க ஒரு Publisher தானே..? எத்தனை புத்தகம் பார்த்துருப்பீங்க? ஒன்னாவது படிச்சுருப்பீங்களா..? படிச்சுருந்தா எப்படி ஒரு எழுத்தாளரை மதிக்கணும்னு தெரியும்.! அதுசரி உங்களுக்கு பணம், பிசினஸ், விற்பனை இப்படித்தானே மைண்ட் போகும்..? ஒரு பெரும் போராட்டத்தை பத்தின படைப்பு மூலமா அவரோட உழைப்பை, கற்பனையை உலகத்துக்கு எடுத்துச்சொல்ற உன்னதமான வேலையை செய்யாம..இப்படி அவரையே நக்கல் பண்றீங்க...? உங்களுக்கு வேணா அவர் பெரிய ஆள் இல்லாம இருக்கலாம்.!! நாட் ஃபார் மீ..! வெறும் கையெழுத்தா பார்த்தா அதுவேறும் ஆட்டோகிராஃப். ஆனா புத்தகத்துல அந்தத்தொடல், அந்த உணர்வு...ப்ச்..! இப்படித்தான் எல்லாரையும் டீல் பண்ணுவீங்களா..?"

இப்போது எனக்கு,
ஒரு இரண்டு நொடி அமைதியான Pause. பேச்சே இல்லை.!!!

வெடிப்பைத் தொடர்ந்தாள்.

"அவரோட கையெழுத்து போட்டு அனுப்பமுடியும்னா சொல்லுங்க..!" இல்லனா நம்பர் கொடுங்க..! நானே பேசிக்கறேன்.!!!"

இனி எப்படி நம்பர் கொடுக்க...? அந்த ந(ம்)பரோடுதானே பேசிக்கொண்டு இருக்கிறாள் அவள்..!

"ஹலோ..! பதிலே சொல்லலை...?"

"எழுத்தாளர் நம்பர் மட்டும் கேட்காதீங்க...ப்ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்...."

இதில் "ப்"கத்தாரில் ஆரம்பித்து "ஸ்"கனடாவில் போய் முடிந்தது.
---------
இருநாட்கள் கழித்து, இன்னொரு Phone Call. வடகிழக்கு இந்தியாவில் இருந்து.

"எனக்கு மேதகுவின் மகள் புத்தகம் கிடைக்குமா....?"

கேட்டது, மிசோரம் தோட்டக்கலை கல்லூரியில் இருந்தொரு பேராசிரியர்.

மதிப்புமிக்கோரிடம் படைப்பு செல்லும்போது எப்போதுமே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்வதால்,

"ஸ்ஷ்யூர் சார்.!" என்றேன்.

"எனக்கு உடனே வேண்டுமே..?"

"கண்டிப்பா...ஒரு 2-3 days-ல கிடைச்சுடும்." நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் வாட்சப்பில் சில புகைப்படங்கள் அனுப்பியிருந்தார். அது மீடியாவில் யாருமே அதிகம் பார்த்திராத மேதகுவின் குடும்பப்படம்.

பார்த்ததும் அப்படியொரு சிலிர்ப்பு.! உணர்ச்சி பொங்கியது. நிறைய எழுதத்தோன்றிய புகைப்படம் அது.

"If you Dont mind, இதை நான் பயன்படுத்திக்கலாமா...?"

"எதுக்கு..? நான் ஒரு இன்ஃபர்மேஷனுக்காக அனுப்பினேன். எல்லாரும் பயன்படுத்திக்க இல்லை..! நீங்க புக் விக்கறீங்க. இதை வெச்சு என்ன பண்ணப்போறீங்க...?"

மீண்டும்,
"அடிபொலி..! அப்போ இவ்வளவு நேரம் இவரும் உன்னை publisher ன்னு நெனச்சுதான் பேசிருக்கார் போல.....கிரா...த..!" மனக்குரங்கு எக்களிக்கும் முன் அடக்கிவிட்டேன்.

ஆனால் இன்னொன்று தோன்றியது.

"நீதானே எழுத்தாளன்..? நேரடியா சொல்லிடு.! அந்தப்புகைப்படம் வெச்சு எழுதணும்னு அவர்கிட்ட கேள்..!தரவேண்டியது அவர் கடமை.!"

சொன்னேன்.

"இருந்துட்டு போங்க தம்பி.! எழுத்தாளர்னா..? இந்த புத்தகம் எழுதி இருக்கீங்க அவ்ளோதானே..? நீங்க எழுதலனா நாளைக்கு வேற ஒருத்தர் எழுதலாம். இல்ல இன்னொருத்தர் எழுதலாம்.! ஆனா, எழுதப்படுறது, ஒரு மாவீரனின் குடும்பம் பற்றியும் ஒரு இனப்போராட்டத்தின் வலியைப் பற்றியும். இங்கே யார் எழுதறாங்க, அவங்க பேர் என்ன, இதெல்லாம் முக்கியம் இல்ல..என்ன எழுதப்படுது அப்டிங்கிறதுதான் முக்கியம்.! உங்க புத்தகத்தின் பேர்தான் என்னை ஈர்த்ததே தவிர, நீங்க இல்ல.!"

இப்போது(ம்) எனக்கு,
ஒரு இரண்டு நொடி அமைதியான Pause. பேச்சே இல்லை.!!!

என் அறிவு, மன, மூளை என்று எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டிருந்தது அவரது வார்த்தைகள்.

உண்மைதான்.

நாம் எல்லோருமே பூஜ்யம். நம் பெயரும் பூஜ்யம். நமது செயல் மட்டுமே நிதர்சனம். இப்பூவுலகுக்கு நாம் விட்டுச்செல்லப்போவது எதை என்று உணர்ந்து யோசித்தால், நாம் சூனியம் என்பது விளங்கும். படைப்பால் நாம் என்றும் நிலைத்திருக்க, இந்த பெயர் பாராட்டு இதன்பின்னே எல்லாம் போகாமல், அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்தப்போகும் விஷயங்களில் கவனம் வைப்போம்.! ஒரு இனப்போராட்டத்தின் முன்னே, அதற்காக அவர்கள் செய்த தியாகத்தின் முன்னே, நாமெல்லாம் வெறும் தூசு.!! இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது..!ச்சை..என்ன பிறவி நாம்..?

நிறைய தெளிய வைத்திருந்தார்.
------------------
ஒரு புத்தகம் எழுதும்போது மட்டுமல்ல, எழுதிமுடித்த பின்னும் கொடுக்கும் அனுபவங்கள்தான் எத்தனை அலாதி...?

நேசிக்கப்படவும் வைக்கிறது.
யோசிக்கப்படவும் வைக்கிறது.

End of the day,
அந்த பிரான்ஸ் பெண்ணுக்கும் இந்தப்பேராசிரியருக்கும் புத்தகம் அனுப்பிவைத்தேன்.

அது மட்டுமே என் கடமை.
-------------------
குறிப்பு:
இந்த முதல் சம்பவம் எழுதும்போது, குழலோன் புத்தகத்துக்காக ஒரு வருடம் காத்திருந்து சென்னையில் கையெழுத்து வாங்கிய கல்பனா, ஃபாத்திமா, சந்தியாவும், கத்தாரில் ஷோபனா, கோகுல்ஷர்மிளாவுக்கு இட்டுக்கொடுத்ததும் நினைவுக்கு வந்தது.

இரண்டாவது சம்பவம் எழுதும்போது, சாட்சாத் இப்போது நான் அறிவித்திருக்கும் சிறுகதைப்போட்டிக்கான தலைப்பு/Content (கலந்துகொள்ள விரும்புவோர்க்கு லிங்க் கமெண்ட் செக்ஷனில்) நினைவுக்கு வந்தது. நீங்கள் எழுதும்போதும், யாராக எழுதுகிறீர்கள், எத்தனை பேருக்கு அது பிடிக்கும் என்றெல்லாம் பார்க்காதீர்கள். இந்த சமூகத்துக்கு என்ன மாதிரியான படைப்பைக் கொடுக்கிறீர்கள் என்று மட்டுமே யோசியுங்கள். அதுதான்,

"Likes-க்கு அப்பால்"
-----------------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

முந்தைய பதிவில், சில ரீல்ஸ்களின் படங்களைத் தொகுத்துப்போட்டு, நாம் நடத்தப்போகும் சிறுகதைப்போட்டிக்கும் இதற்கும் தொடர்புண்...
22/08/2026

முந்தைய பதிவில், சில ரீல்ஸ்களின் படங்களைத் தொகுத்துப்போட்டு, நாம் நடத்தப்போகும் சிறுகதைப்போட்டிக்கும் இதற்கும் தொடர்புண்டு, ஆதலால் தலைப்பை Guess செய்யவும் என்று போட்டிருந்தோம். நிறைய பேர் தொட்டிருந்தனர். இப்போது நேராகவே அறிவித்து விடுவோம் -
-------------
சரித்ராவின் எழுத்துலகு -
சிறுகதைப் போட்டி 2026

கதையின் கரு/Title :

“Like-க்கு அப்பால்…”

தலைப்பைப் பற்றி விளக்கமாக எதுவும் சொல்லத்தேவையில்லை. உங்களுக்கே புரியும். சிலபல வருடங்கள் முன்புவரை நாம் பணத்தின் பின்னால் ஓடினோம். அன்பின் பின்னால் ஓடினோம், மனிதர்களின் பின்னால் ஓடினோம், இதெல்லாமே அபாயம் என்றால், அதைவிட அபாயமாய், இப்போது....

புரியுமென்று நினைக்கிறேன்.

“Like-க்கு அப்பால்…” - உங்கள் கைவண்ணத்தில், உங்களுக்குத் தோன்றுவதை சிறுகதையாக வடிக்கலாம். கீழுள்ள விதிமுறைகள் கவனம்.

All the Best
---

📜 விதிமுறைகள்

01. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

02. போட்டியில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் இல்லை.

03. ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

04. கதை சமூகப் பிரச்சனையை/வாழ்வுமுறையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

05. கதை 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.

06. போட்டிக்காகவே எழுதப்பட்ட புதிய மற்றும் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.

07. முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியாகவோ AI மூலம் உருவாக்கப்பட்ட கதைகள் அனுமதிக்கப்படாது.

08. கதையை Document வடிவில் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

09. படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
📧 [email protected]

10. படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
30.09.2026

11. போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள்:
30.10.2026
---
🏆 பரிசுகள்

🥇 முதல் பரிசு — ₹5,000/-
🥈 இரண்டாம் பரிசு — ₹3,000/-
🥉 மூன்றாம் பரிசு — ₹1,000/-

🏅 அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் Participation Certificate வழங்கப்படும்.
---
⚖️ முக்கிய குறிப்பு

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
-------------------
குறிப்பு:
Special Mention சிறுகதைக்கு மிகச்சிறப்பு பரிசு ஒன்றும் உண்டு. அது சஸ்பென்ஸ்.
--------------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

பாலச்சந்தரின் எதிர்நீச்சல்(1968) படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு நாகேஷ் எந்தளவு காரணமோ அதேயளவு, இந்த அடுத்தாத்து அம்புஜத...
21/08/2026

பாலச்சந்தரின் எதிர்நீச்சல்(1968) படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு நாகேஷ் எந்தளவு காரணமோ அதேயளவு, இந்த அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..? "பட்டுமாமி"யும். அதே பாலச்சந்தரின் 1981-'தில்லுமுல்லு'வில் ரஜினி அளவுக்கு சேட்டையான நாகரீக Fraudster பெண்மணியாக கலக்கியிருப்பார். அதில் தேங்காய் சீனிவாசனுடனான அந்த பங்க்ஷன் உரையாடல், ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.

"புதிய பறவை"யில் நடிகர் திலகத்தை சாந்தம் பூசிய கொடூர வில்லனாக்கிய பெருமை, சௌகாரையே சேரும். பணம் படைத்தவனில் மக்கள்திலகத்தை "கண் போன போக்கிலே கால் போகலாமா"வென பாட வைத்தவர்.

இருகோடுகளில் 'புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்' என வெறும் ஜெமினியை இருதார காதல்மன்னன் ஆக்கியவர்.

இவரது Contemporaries அனைவருக்கும் இவர் சரியான போட்டி.

உதா:
Against பானுமதி, பட்டதாரி & Honorary பட்டம் வாங்கிய முதல் Graduated நடிகை.
Against KR விஜயா, திருமணத்துக்குப்பின் கதாநாயகியான முதல் தென்னிந்திய நடிகை.
Against வைஜெயந்திமாலா, முதல் Pan India நடிகை.
Against பத்மினி, நடிகர்திலகத்துடன் நிறைய Apt Choice ஜோடிப்படங்கள்.

இவற்றையெல்லாம் ரசித்த தலைமுறை நிச்சயம் இவரை-

"பார்த்த ஞாபகம்" இல்லாமல் இருக்காது.!

RIP❤
-----------------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

19/08/2026

"ஊர், பெயர், அடையாளம் வெளியிட வேண்டாமே...?" என்ற குறிப்போடு வந்து சேர்ந்த Surprise Gift இது. நிஜமாகவே பெயரும் இல்லை அதுவேறு விஷயம். பேரன்பால் வெகு நேரமெடுத்து, காலமெடுத்து, நிறைய யோசித்து ரொம்பவே மெனக்கெட்டு செய்திருக்கிறாள்.

"I Just Loved loved it..!" என்று சிலாகிப்பதை விடவும், Charithraa's Publications-ற்காக அடுத்தடுத்த கனவுகளையும் கடமைகளையும் LED வெளிச்சத்தில் இந்த Gift சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பதற்காவே, "I Just have to Work More..!" என்று யோசித்து செயல்படுவது உசிதம்.

Anyhow இதற்கெல்லாம்....

நன்றிகள் சொன்னால்
மறுக்காது ஏற்பாயா?
இல்லையேல்,
போய்யா நீயுமுன் தேங்க்ஸுமெனத்
திட்டித்..தீர்ப்பாயா?
-------------------
குறிப்பு:
"இன்னொரு தடவ படிக்கிறேன் கிழிக்கிறேன்னு அவன் பேஜுக்கு போன, வெளுத்துடுவேன்..!" போன்ற மிரட்டல் காரணங்களுக்காவே சரித்ராவின் ரசிகை/நேசகி/வாசகி/சுவாசகி என்று ID-க்கள் தான் Fake-ஆக இஷ்டத்துக்கு இருந்தாலும், ஆத்மாக்கள், அவர்கள் காட்டும் அன்பு என எல்லாமே ஒரிஜினல்தான்.

புத்தகங்கள் வாங்கித் தள்ளுவது, அவற்றை கொண்டு சேர்ப்பதற்காக பின்னால் நிறைய மெனக்கெடுவது, எழுத்துகள் யாவையும் தொகுப்பது, அகர வரிசைப்படி, கால வரிசைப்படி லிங்க் கிரியேட் செய்வது, எதை எப்போது கேட்டாலும் எடுத்துத்தருவது.....No limits!

அவ(ர்க)ள்,
வெளியில் தெரிவதில்லை.
இம்ஸை செய்வதில்லை.
ஏற்பு மறுப்பு கவலையின்றி
காதல் செய்தாலும்....

எனக்கே தெரிவதில்லை.!

பெயர் சொல்லாவிட்டாலும், அடையாளம் இல்லாவிட்டாலும் "கறை, நல்லதுதான்.!" என்பதுபோல் எனது எழுத்தாறு தங்குதடையின்றி ஓடிட இருபுறமும் நிற்பதாலேயே இந்தக் "கரை, நல்லதுதான்.!"
----------------------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

Don't Worry . இந்த அரதக்கன்றாவி நான்கு ரீல்ஸ்களை பற்றி விமர்சித்து எதுவும் எழுதப்போவதில்லை. அது வீண் என்றும் தெரியும்.ஆன...
19/08/2026

Don't Worry . இந்த அரதக்கன்றாவி நான்கு ரீல்ஸ்களை பற்றி விமர்சித்து எதுவும் எழுதப்போவதில்லை. அது வீண் என்றும் தெரியும்.

ஆனால், இவை சார்ந்த (நீங்கள் எழுதப்போகும்) ஒரு சிறுகதைப்போட்டிக்கு தயார் செய்துகொண்டிருக்கிறோம். தலைப்பை முடிந்தால் Guess செய்யவும்.

அதற்குமுன், இந்த ரீல்ஸ்களின் சாராம்சம்-

1. மாமியாரை அம்மாவைப் போல்...என்று மருமகன் மாமியாரிடம் நிறைய சேட்டைகள் செய்யும் தருணம். அவை அப்படி இருப்பதாக தெரியவில்லை என்பது வேறு விஷயம். கமென்டில் எல்லோரும் கரித்துக்கொட்டினாலும் ஒரேயொரு கமென்ட் யோசிக்க வைத்தது.

"மொதல்ல அம்மாவை அம்மாவா பாருங்கடா..மரியாதை கொடுங்க. அப்புறமா மாமியாருக்கு வரலாம்."

2. பாஸ்போர்ட் விசா வந்ததெல்லாம் வாழ்நாள் உலக சாதனை என்று ரீல்ஸில் பொங்கிய தருணம். இந்த எவரெஸ்ட் சிகரம் தொட்ட இராணுவப் பெண்மணிகள், செஞ்சுரி கிரிக்கெட்டர் ஸ்ம்ருதி மந்தனா, முதல் பெண் நாவலிஸ்ட் கேட்டவரம் அநுத்தமா, 2025ற்கான அர்ஜுனா விருது பெற்ற திவ்யா தேஷ்முக்(செஸ்), பிரியங்கா கோஸ்வாமி (தடகளம்), பூஜா (கபடி), நேஹா நந்தகுமார் (துப்பாக்கி சுடுதல்) இவர்கள் செய்த சாதனையெல்லாம் சாதனையே அல்ல. Simply Waste.

3. இதற்கு விளக்கமே தேவையில்லை.

4. கேமராவுக்கு முன். கேமராவுக்கு பின். அல்லது, ரீல்சுக்கு முன், ரீல்சுக்கு பின் என்று பிரித்துப்பார்த்தால் தெரியும், இந்த மண்ணாங்கட்டி எமோஷனல் வண்டவாளம்.

Coming back to the Point, இந்நேரத்துக்கு சிறுகதையின் தலைப்பை நீங்கள் யூகித்திருக்கக் கூடும்.

முடிந்தால் கமெண்ட் இடுக.
இல்லையெனினும் தனி பதிவாக அறிவிக்கப்படும்.

ஏனெனில் கதை எழுதப்போவது,

சாட்சாத் நீங்கள்.!❤️
-------------------------------
குறிப்பு
Undeniably நாம் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் இதுபோல் ஆயிரக்கணக்கான ரீல்ஸ்கள் மட்டுமே முழுக்க முழுக்க உலவி வருகிறது சோ.மீடியாவில். அவற்றுள் ஒரு பானை புளுக்கைக்கு நான்கு புளுக்கைகள் பதம் என்பதுபோல் இவை.

Recent Edit :
Title மற்றும் போட்டி முறையாக அறிவித்துவிட்டோம். லிங்க் கீழே:

https://www.facebook.com/photo/?fbid=1587717883368048&set=a.594368039369709
--------------------------------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

18/08/2026

முழுவதும் கேளுங்கள், தேர்ந்த வாசிப்புக்கு பின் அனுப்பப்பட்ட இந்தக் குறுஞ்செய்தியை.

அகழி புத்தகாலயத்தின்(கொழும்பு) பணியை சிறக்கவே செய்கின்றனர். ஆதலாலேயே காத்திருந்து நின்று புத்தகம் வாங்கிச்செல்லுமளவுக்கு வாசகர்வட்டம் இருக்கிறது. கிட்டத்தட்ட 8.30மணி முதல் 10.30மணி வரை மூடியிருந்த கடை முன்பு காத்திருந்து "மேதகுவின் மகளை" இலங்கையிலிருந்து ஃபிரான்சுக்கு வாங்கிச்சென்றிருக்கிறார் இந்தப்பெண்.

அலசி ஆராய்ந்து வாசித்து, புத்தகத்தின் உயிர்நாடியை தொட்டு அதையே பின்னூட்டமாக அனுப்பியமைக்கு பெரும் பெரும் நன்றிகள்.

குறிப்பு:
சகோதரி சொல்வது போல் கிழக்கு மாகாணத்தில் அண்ணாச்சி என்ற சொல்லாடல் கிடையாது. அண்ணை தான். அக்காச்சி உண்டு. ஆயினும் கதைப்படி விசாலினி , சுஷாந்தினி குணாளன் யாவரும் Western Province அநுராதபுரத்துக்கு கீழே வளர்வதால், அவர்களிடம் ஒரு கலப்புமொழி லேசாக எட்டிப்பார்க்கும். தவிர, சுஷாந்தினி ஈழம்+சிங்கள வளர்ப்பு என்பதாலும், அவளோடு ஒட்டியிருக்கும் விசாலினியும் அவ்வாறே என்பதாலும் அவர்கள் கதைப்பது அவ்வாறு. அப்படியே இறுதிப்பக்கங்களுக்கு செல்லும்போது, கதை மாந்தர்களான அச்சிறுவர்கள், வடக்கு வட்டாரப்படி "அண்ணை" என்றே கதைப்பர்.

இதை விளக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு பெரும் நன்றிகள். மேலோட்டமாக வாசிக்காமல் உள்வாங்கி இருக்கிறீர்கள். அடுத்த பாகத்திற்கான குறியீட்டையும் கண்டுபிடித்துக்கூறியமைக்கும் பெரும் நன்றிகள். பலருக்கு இன்னும் புரியும்.

நான் தமிழ்நாட்டுத் தமிழன்தான். இருப்பினுமென் இதயத்துடிப்பின் லப்டப் லப்டப்பில்,

லப் இந்தியாவிலும், டப் ஈழத்திலும் இருக்கிறது.

எனது அடுத்தடுத்த/பிற படைப்புகள் பற்றிய கேள்விக்கு, நிச்சயமாய் அவற்றையும் அங்கே தருவிக்க முயற்சி செய்கிறேன்.

இப்போதைக்கென் நன்றிகளை
பெறுக.
இனி உம் வாசிப்பென்றும்
பெருக. ❤
---------------------
புத்தகம் கிடைக்குமிடம்:
கொழும்பு அகழி புத்தகாலயம்-கொழும்பு
Agazli books store
Hewa shopping complex Dehiwala
No.69 1/7, Galle Road , Dehiwala,Colombo.
0768082128 / 0753240942
----------------------
இந்தியா மற்றும் பிற நாடுகளில் வேண்டுவோர்க்கு:
புத்தகம் : மேதகுவின் மகள் - துவாரகா.
வெளியீடு : Charithraa's Publications
பக்கங்கள் : 180
விலை : 250 + PC
Contact :
+91 74185 80369
+91 70928 84657
-----------------------
Writer Charithraa's

https://www.instagram.com/charithraas/

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

Address

ByePass Extension
Tiruchirappalli
621010

Alerts

Be the first to know and let us send you an email when Writer Charithraa's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Writer Charithraa's:

Shortcuts

Share