Eravur News

Eravur News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eravur News, Cabinet & Countertop Store, Batticaloa.

09/06/2025

பாடசாலையில் வைத்து 6 வயது சிறுமி ஆசிரியரால் துஷ்பிரயோகம்

மூதூர் வலயத்தில் சம்பவம் - ஆசிரியரைப் பாதுகாக்கவும் முயற்சி

சஞ்ஜீவன் துரைநாயகம்

மூதூர் வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய கிராமமொன்றில் இருக்கின்ற பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (06) அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் பாடசாலையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி பாடசாலை இடைவேளை நேரங்களிலும், பாடசாலை முடைவடைகின்ற நேரங்களிலும் பாடசாலையில் வைத்து பலமுறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டள்ளதாகத் தெரிய வருகின்றது. தற்போது குறித்த சிறுமி பாடசாலைக்குச் செல்ல அச்சப்படுவதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக பெற்றோரால் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது பொலிஸார் குறித்த சம்பவத்தை பெரிசுபடுத்த வேண்டாம். அவருக்கு இடமாற்றம் வழங்கி தண்டனை வழங்குவோம் எனக்கூறி சமாதானமாக செல்லுமாறும் முறைப்பாட்டை ஏற்க மறுத்ததாகவும் தெரிய வருகின்றது.

காரணம் ஆசிரியர் இன்னும் சில மாதத்தில் ஓய்வு நிலைக்குச்செல்ல இருக்கின்றாராம். அத்துடன், பாடசாலையின் பெயர் பாதிக்கப்படும் என அதிபர் அஞ்சுகின்றாராம். இதை விட மாணவியின் எதிர்காலம் பாதிக்கும் என்ற நல்ல எண்ணமுமாம்.

குறித்த பாடசாலையில் இது போன்ற மேலும் சில துஸ்பிரயோக சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதை விட தரம் 9ல் கல்வி கற்ற மாணவி ஒருவர் சில காலத்திற்கு முன்னர் தற்கொலை செய்திருந்ததாகவும் தெரிய வருகின்றது. தற்கொலைக்கு துஸ்பிரயோகம் காரணமாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுகின்றது. அதை விட இந்த ஆசிரியர் எத்தனை பேரை துஸ்பியோகம் செய்துள்ளார் என்ற கேள்வியும் எழுகின்றது.

துஷ்பிரயோகத்தை மேற்கொண்ட ஆசிரியரை பாதுகாக்குமுகமாக சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய சிலர் விலை போயுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கும் மேலும் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுமிகளுக்கும் நீதியைப் பெற்றுத்தர எத்தனை சட்டத்தரணிகள் தயாராக இருக்கின்றார்கள்?

எங்கேயோ நடக்கின்ற விடயத்திற்காக பொங்கி எழும் எத்தனைபேர் இங்கே நடந்த விடயத்திற்காக குரல் கொடுக்கத்தயாராக இருக்கின்றீர்கள்?

எனது கோரிக்கைகள்

1.பாதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் நீதியும், இழப்பீடும் கிடைக்க வேண்டும்.
2.குறித்த விடயம் தொடர்பாக நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
3.துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.
4.வழங்கப்படுகின்ற தண்டனை இவ்வாறான சம்பவங்கள் இடப்பெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவியின் எதிர்காலம் கருதி விபரமாக பதிவிடுவதை தவிர்த்திருக்கின்றேன். எனினும் பொலிசார் இதனை இரகசியமாக முன்னெடுத்து மாணவியின் பெயர் வெளியில் வராமலேயே குறித்த ஆசிரியருக்கு தகுந்த தண்டனையை பெற்றுக் கொடுக்க முடியும்.

இல்லாவிட்டால் குறித்த விடயம் சமூகமயப்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்குமா?
இந்த அரசிலும் பணம் பாதாளம் வரை பாயுமா?

பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்காக குரல் கொடுக்க எம்மில் எத்தனைபேர் தயாராக இருக்கின்றோம்?

நான் பார்த்த மட்டில் காத்தான்குடி சமூகத்தில், அரசியல், வியாபாரம், ஏழை பணக்காரன், கொள்கை முரண்பாடுகள் போன்ற காரணங்களினால்...
02/06/2025

நான் பார்த்த மட்டில் காத்தான்குடி சமூகத்தில், அரசியல், வியாபாரம், ஏழை பணக்காரன், கொள்கை முரண்பாடுகள் போன்ற காரணங்களினால் மற்ற ஊர்களை விடவும் பிழவுகள் அதிகம்.

அதே நேரம், அனர்த்தங்களின் போது தங்கள் வேற்றுமைகளை மறந்து, தங்கள் உயிர்களை துச்சமென கருதி, ஒற்றுமையுடன் களத்தில் நின்று களப்பணி செய்வதில் காத்தான்குடி மக்களை மிஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாது.!

அத்தகையவர்களின் அர்ப்பணிப்புக்கு அல்லாஹ் மகத்தான கூலியை வழங்குவானாக.

வேற்றுமையிலும் ஒற்றுமைப்படும் காத்தான்குடி சமூகம், காத்தான்குடியில் உள்ள அநியாயக்காரர்கள் குறித்தும் காத்தான்குடியில் இடம்பெறும் அநீதிகள் குறித்தும் மௌனமாக இருப்பதுதான் புரியாத புதிராக உள்ளது !

"கொரோனா காலத்தில் இதையும் அதையும் செய்தோம்" என்று சொல்லக்கூடிய இவர், மெடிகல் சேல்ஸ் ரெப்பாக வேலைசெய்து வந்த பெரோஸ் முகமட...
14/04/2025

"கொரோனா காலத்தில் இதையும் அதையும் செய்தோம்" என்று சொல்லக்கூடிய இவர், மெடிகல் சேல்ஸ் ரெப்பாக வேலைசெய்து வந்த பெரோஸ் முகமட் என்பவரின் உதவியுடன் கொரோனா லொக்டவ்ன் பாஸ் ஐ பயன்படுத்தி வெளியூர்களில் இருந்து ஐஸ் கேஜி போன்ற போதைப்பொருட்களை மொத்தமாக காத்தான்குடிக்கு கொண்டு வந்து, பின்னர் காத்தான்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியின் ஒத்துழைப்புடன், பாலமுனை வளவொன்றுக்குள் வைத்து அவற்றை சில்லறை விற்பனைக்காக பொதி செய்ததையும் குறிப்பிட மறந்துவிட்டார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக இம்முறை காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் போட்டியிடும் ALM. றமீஸ் என்பவரின் மைத்துனர...
31/03/2025

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக இம்முறை காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் போட்டியிடும் ALM. றமீஸ் என்பவரின் மைத்துனர் அஜ்மல் என்பவர் 10.400கிராம் (ஐஸ்) போதைப்பொருளுடன் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மன்னார் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து மொத்தமாக போதை பொருட்களை கொண்டு வந்து சில்லரை வியாபாரம் செய்பவர் என தெரியவந்துள்ளது.

24/03/2025

காத்தான்குடி | மட்/மீரா பாலிகா அதிபர் [பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு]

காத்தான்குடி மட்/மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பெண்கள் பாடசாலை அதிபர் அஷ் ஷெய்க் UL. மன்சூர் அவர்கள்
கோட்ட கல்விப் பணிப்பாளர் AGM. ஹகீம்,
ஊடகவியலாளர் MSM. சஜீ,
சமூக செயட்பாட்டாளர் MM. முஜாஹித்(சவுதி அரேபியா) ஆகியோருக்கெதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெயதுள்ளார்.

குறித்த முறைப்பாடானது, பாடசாலையின் பிரதி அதிபரும் முஸ்லீம் காங்ரஸ் கட்சியின் முன்னால் கொள்கை பரப்புச்செயலாளரும் காத்தான்குடி நகரசபையின் முன்னால் தவிசாளரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளருமான ULMN. முபீன் சேர் மற்றும் ULM. லாபிர், APM. ஜலால்தீன் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களான MM. பைசல் AMM. நவாஸ் AKM. ரிஸ்வி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் பதியவுசெய்யப்பட்டுள்ளது.

தகவல்:
பாடசாலை ஆசிரியர்.

12/03/2025

#குவைத் சென்ற இவர் #உயிருடன் இருக்கிறாரா,
இல்லையா என்பதை #கண்டறிய உதவுங்கள்....!!!!!!!

சகோதரர் #றியாஸ்.....
பிறந்த இடம் #தம்பலகாமம்_கந்தளாய்,
#திருமணம் முடித்து இருப்பது #மீராவோடை_ஓட்டமாவடி....
2025.02.22. ம் திகதியுடன் இவர் #குவைத் சென்று
சரியாக #ஒரு_வருடமாகி விட்டது

இது வரை இவர் #தாய் #தந்தை, #சகோதரர்கள், #மனைவி #பிள்ளைகள், அவரது #குடும்பம், #நண்பர்கள் யாருடனும் எவ்வித #தொடர்புகளும் இல்லை

அவரை தொடர்பு கொள்ள #முயற்சித்தால்
எவ்வித பதிலும் இல்லை....

தயவு செய்து அவர்களுடன் #தொடர்பை ஏற்படுத்தி இவர்
#உயிரோடு இருக்கும் விடயத்தையாவது
#உறுதிப்படுத்த உதவி செய்யுங்கள்....

அல்லது #குவைத் வாழ் எமது #இலங்கை_சகோதரர்கள் இவர் பற்றிய #தகவல்கள் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்கவும்.....

மேலதிக #தகவல்களுக்கு....👇👇👇
0765284552
0752266772https://www.facebook.com/profile.php?id=100090054747298&mibextid=ZbWKwL

23/02/2025
அடையாளம் கான உதவுங்கள் ..!!
22/02/2025

அடையாளம் கான உதவுங்கள் ..!!

காத்தான்குடியை மையப்படுத்தி பிரபல இர்பான் முகம்மட் போலி முகநூலை இயக்கிவந்த பாத்தாள உலக கும்பளோடு தொடர்புடைய #கச்சி_முகம்மது_பஸ்லி என்பவன் அவனது உள்ளாச விடுதியில் ஆசை நாயகியோடு எடுத்துக்கொண்ட புகைப்படம்.

20/02/2025

கனடா அனுபுவதாக பொய்செல்லி இலங்கை இந்தியா யென பலரையும் ஏமாற்றி கோடிகணகான பணத்தை மோசடிசெய்து வந்த இர்பான் முகம்மட் போலி முகநூல் இயகுநர் கச்சிமுகமது பஸ்லி மீண்டும் மோசடி வேட்டையை ஆரம்பித்துள்ளார்..

19/02/2025

மாணவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை அதிபர்கள் மூடிமறைப்பது ஏன்?

சாலை போக்குவரத்துக் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி பாடசாலை மாணவிகளை சுரங்கப்பாதைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் காத்தான்குடியில் பதிவாகி உள்ளது.

பாடசாலை அதிபர் சம்பவத்தை மறைத்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாக்க முயன்றதாகவும் இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் யாராவது வெளியே சொன்னால் அவர்கள் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று மணவர்களையும் மாணவர்களின் பெற்றாரையும் அதிபர் மிரட்டியதாக தெரியவந்துள்ளது.

இதேபோன்று நேற்றைய தினம் மல்லாவி காவல்துறை அதிகாரி ஒருவர் போதையில் யோகபுரம் பாடசாலைக்குள் நுழைந்து பாடசாலை மாணவிகளை கழிப்பறைக்குள் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது ​​கையும் களவுமாக பிடிபட்டார்.

அந்த சம்பவத்தையும் அந்த பாடசாலை அதிபர் மறைக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள், தயவுசெய்து இதை முடிந்தவரை பகிரவும்.

காசாவில் அரங்கேறிய வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்… 4 இஸ்ரேல் கைதிகக்ளுகு பகரமாக 200 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை.பலத்தை பற...
25/01/2025

காசாவில் அரங்கேறிய வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்… 4 இஸ்ரேல் கைதிகக்ளுகு பகரமாக 200 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை.
பலத்தை பறைசாற்றிய காசா போராளிகள்

ராணுவ கைதிகளை விடுவிக்கும்போது எந்தவித கொண்டாட்டமும் இருக்கக்கூடாது என்று நெதன்யாகு கண்டிப்பாகக் கூறியிருந்தார். ஆனால், கஸ்ஸாம் அதை அலட்சியம் செய்து கொண்டாட்டத்துடனே விடுவித்தனர்.

"தூஃபானுல் அக்ஸா" என்ற பதாகை வைக்கப்பட்டிருந்த மேடையில் அந்த நான்கு பெண்களும் கம்பீரமாக நிற்பதைப் பார்த்தால், அவர்கள்தான் தூஃபானின் செய்தித் தொடர்பாளர்கள் என்று எண்ணத் தோன்றும். செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு, ஃபலஸ்தீன மைதானத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, அங்கு திரண்டிருந்த காஸா மக்களை நோக்கி புன்னகைத்து கையசைத்து, இரட்டை விரல் (வெற்றி) அடையாளத்தைக் காட்டி விடைபெற்றனர். அவர்கள் பிடிபட்டபோது அணிந்திருந்த ராணுவ சீருடை புதிதாகத் தேய்த்து மினுக்கப்பட்டது போலிருந்தது. அதைப் பார்த்தால், ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு வந்த கௌரவ விருந்தினர்களைப் போலத் தோன்றியது. அவர்கள் கைகளில் பரிசுப் பொட்டலங்களும் இருந்தன.

இதுதான் காஸா. போராளிகளின் வீர சொர்க்கம், ஆணவமிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் இறுதிக் கல்லறை.copy

Address

Batticaloa
119

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eravur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share