28/09/2025
*"கரூர் – சின்னதானா இழப்பு?"*
ஒரு கண்ணோட்டம் போதாதா…
கண்காணிப்பு கேமராக்களால்
உயிர்கள் கணக்காகிவிட்டதா?
சினிமா ஒரு கலைதான்,
ஆனால்… கடவுளா கலைஞன்?
வந்தான் ஒருவன் —
வெறும் புகழுடன்,
வாசல் தாண்டும் முன்
வாழ்க்கை விலைகொடுத்தது.
*ஏன்? யாருக்காக?*
வாழ்த்து சொல்ல வந்ததா?
வாழ்வை வாங்க வந்ததா?
வீதி தாங்குமா?
வீரம் பேச முடியுமா?
இதைப்போல ஒரு கூட்டத்தில்
பிறர் உயிர் வேண்டுமா?
பசியோடு பார்த்த கண்கள் –
பாசமா… பயமா… தெரியாதோ?
மனிதநேயம் போலி ஆவணமா?
தலைவன் தேடிட
தொழுது நின்றோம்…
தோளில் துணையில்லை,
தொண்டன் மட்டும் தான் வீழ்ந்தான்!
மயானக் காற்றில்
மேடை கட்டுகிறோம் –
மனநிலை போய்விட்டதோ…
நாடே சினிமாவா?
இது கேலியாகும்!
*ஏன் தம் உயிர் இழந்தார்…?*
ஏதோ ஒரு படம் பார்த்த மாதிரி
கண்ணீர் விட்டுப் போகலாமா?
ஒரு மேடையில் நடித்தார்,
மற்றோர் மண்ணில் தூங்கினார்…
இது தமிழரது வரலாறா?
தூக்கி வீசக் கூடிய தொலைவா?
கட்சி… கலை… கண்ணீர் –
இவை நம் உணர்வுகளின் விற்பனைபட்டியலா?
நாம்தான் மாற்றமா?
நீயோ நானோ தவறா?
தலைவரே, தன்னலம் விலகி
தாளமாய் நாட்டை ஒலிக்க வா!
*பாவலர். சரவணன் சம்பத்,*
தர்மபுரி.